ரோசவ்’க்கு சரியான பதிலடி கொடுத்தாரு.. இந்தியாவின் நலனுக்காக விராட் கோலி இதை செய்யனும்.. கும்ப்ளே பாராட்டு

Anil Kumble 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்பதாம் தேதி நடைபெற்ற 58வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மறுபுறம் தோல்வியை சந்தித்த பஞ்சாப் இரண்டாவது அணியாக வெளியேறியது.

தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 92, கேமரூன் கிரீன் 46, ரஜத் படிடார் 55 ரன்கள் எடுத்த உதவியுடன் 242 ரன்களை இலக்கை நிர்ணயித்தது. அதை துரத்திய பஞ்சாப் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரிலீ ரோசவ் 61 (27) ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

கும்ப்ளே பாராட்டு:
இந்த வெற்றிக்கு 92 ரன்கள் அடித்த முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதை விட 92 ரன்களை 195.74 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் சாதனைக்காக சுயநலத்துடன் விளையாடுகிறார் என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் யார் என்ன சொன்னாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இதே ஃபார்மில் விராட் கோலி விளையாட வேண்டும் என்று அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் அற்புதமான ஃபார்மில் உள்ளார். கொஞ்சம் ஓய்வெடுத்து ஐபிஎல் தொடருக்கு விளையாட வந்த அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதை உங்களால் பார்க்க முடியும். அதாவது அவர் 634 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த 2 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஆர்சிபி அணிக்கு அவர் தேவை”

- Advertisement -

“அதை விட இந்தியாவின் நலனுக்காக உலகக் கோப்பையிலும் அவர் இதே ஃபார்மில் இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் இப்போட்டியில் ரிலீ ரோசவ் அரை சதத்தை கொண்டாடியதற்கு விராட் கோலி பதிலடி கொடுத்த விதம் சிறப்பாக இருந்ததாக ஷேன் வாட்சன் பாராட்டினார். இது பற்றி அதே நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டியின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்”

இதையும் படிங்க: ஆள் இல்ல.. சிஎஸ்கே அணிக்காக தோனி அதை செய்றாரு.. ஊதி பெருசாக்காதீங்க.. பிளெமிங் பதிலடி

“குறிப்பாக அவர் ரோசவ்வை உங்களுக்கு தெரியப்படுத்துவதை உறுதி செய்தார். அது போட்டியின் முக்கியமான நேரமாகவும் இருந்தது. அந்த வகையில் விராட் கோலி எதையும் விடாமல் ஒவ்வொரு பந்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்” என்று ஜியோ சினிமா சேனலில் கூறினார். மொத்தத்தில் டி20 உலகக் கோப்பைக்கு முன் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement