- Advertisement -
ஐ.பி.எல்

தோனியை பற்றி தவறாக விமர்சிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்.. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? – விவரம் இதோ

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது ஆர்சிபி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதோடு நடப்பு சாம்பியனாக இந்த சீசனில் களமிறங்கிய சென்னை அணியானது இம்முறையும் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் சென்னை அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் இருந்த ஆர்சிபி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது சென்னை அணியின் வீரர்களுக்கு கை கொடுக்க வரவில்லை.

- Advertisement -

சற்று தாமதமாகவே ஆர்சிபி அணியின் வீரர்கள் வெற்றியை கொண்டாடிவிட்டு சென்னை அணியின் வீரர்களுடன் கை கொடுத்து விட்டு சென்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து முதல் நபராக மைதானத்திற்குள் வந்த தோனி ஆர்சிபி அணியின் வீரர்களுக்கு கை கொடுக்க காத்திருந்து பின்னர் ஓய்வறையை நோக்கி சென்றார்.

இப்படி ஆர்.சி.பி வீரர்களுக்கு கை கொடுக்காமல் ஓய்வறையை நோக்கி சென்றது பற்றி தோனியை ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதில் நடந்த உண்மை தன்மையே வேறு என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டி முடிந்த பின்னர் முதுகு வலியை சந்தித்துள்ளார் தோனி.

- Advertisement -

அதற்கான முதலுதவி சிகிச்சை பெறவே ஓய்வறையை நோக்கி நகர்ந்தார். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணி வீரர்களுக்கு அவர் கைகுலுக்கி செல்லவில்லை என்றாலும் பவுண்டரி லைனில் இருந்த அனைத்து பெங்களூரு அணியின் நிர்வாக ஊழியர்களுக்கும் கை கொடுத்த பின்னரே அவர் ஓய்வருக்கு சென்றார்.

இதையும் படிங்க : இந்தியா குறை சொல்லக்கூடாது.. இங்கிலாந்து நியாயமா தான் இருக்கோம்.. கவாஸ்கர், பதானுக்கு மைக்கேல் வாகன் பதிலடி

இப்படி எதிரணி நிர்வாகிகளை மதித்து சென்ற தோனியை தவறாக நினைத்துக் கொண்டு ஆர்.சி.பி அணிகளின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதே வேளையில் மைதானத்திற்கு வெளியில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களையும் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் கூட்டமானது கிண்டல் செய்ததையும் சமூக வலைதளத்தில் வீடியோவாக நாம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -