மீண்டும் சி.எஸ்.கே அணியில் சாம் கரன். இறுதிப்போட்டிக்கு பின்னர் பேசியது என்ன? – விவரம் இதோ

Sam-Curran-CSK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வந்த ஐசிசி-யின் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது மெல்போர்ன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய வேளையில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணியானது அபார வெற்றி பெற்று டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

Sam Curran

- Advertisement -

இங்கிலாந்து அணி பெற்ற இந்த வெற்றிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் இந்த வெற்றிக்கு வித்திட்ட அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய அவர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெற்ற இந்த விருதுகளுக்கு பிறகு பேசிய சாம் கரன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது குறித்தும், அங்கிருந்து கற்றுக் கொண்ட விடயங்கள் குறித்தும் மிகப் பெருமையாக பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் ஐபிஎல் தொடரில் விளையாடிய நாட்களை எப்போதும் மறக்க மாட்டேன். அந்த அளவிற்கு அந்த நினைவுகளை நான் நேசிக்கிறேன். ஏனெனில் ஐபிஎல் விளையாடும் போது நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன்.

curran 1

அதேபோன்று இது போன்ற பெரிய உலகக்கோப்பை தொடர்களில் இக்கட்டான சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன், நான் ஐபிஎல் விளையாடியது மிக அற்புதமான தருணம். மேலும் நான் எப்பொழுதுமே புதிதாக பல விடயங்களை கற்றுக் கொள்கிறேன். மேலும் அதிலிருந்து என்னை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கிறேன். கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஐபிஎல்-இல் மீண்டும் விளையாட வருவேன் என்று சாம் கரன் நம்பிக்கை அளித்து இருந்தார்.

- Advertisement -

இதன் மூலம் நிச்சயம் அவர் சிஎஸ்கே அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவர் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க : விராட் கோலியை ஏமாற்றிய ஐ.சி.சி. பித்தலாட்டம் அம்பலம் – என்னங்க இதெல்லாம் ரசிகர்கள் கேள்வி

சென்னை அணிக்காக 23 போட்டிகளில் விளையாடி இருந்த அவர் கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் ஐபிஎல் விளையாடுவேன் என்று அவர் தற்போது அறிவித்துள்ளதால் நிச்சயம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Advertisement