விராட் கோலியை ஏமாற்றிய ஐ.சி.சி. பித்தலாட்டம் அம்பலம் – என்னங்க இதெல்லாம் ரசிகர்கள் கேள்வி

Sam-Curran-and-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடரானது மெல்போர்ன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Sam Curran 1

- Advertisement -

இந்த போட்டியில் மிக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாம் கரன் நான்கு ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் சாம் கரனுக்கு வழங்கப்பட்ட இந்த தொடர் நாயகன் விருது குறித்த சர்ச்சை தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் இந்தத் தொடரின் இடையே ஐசிசி வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் : இந்த உலகக் கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அதற்காக பிரத்தியேகமாக ஒன்பது வீரர்களையும் ஐசிசி பட்டியலிட்டது. அந்த பட்டியலில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர், சிக்கந்தர் ராசா, ஷதாப்கான் மற்றும் ஹசரங்கா போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

Sam Curran

இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவருக்கு ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் தொடர் நாயகன் விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய போட்டி முடிந்த பின்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட சாம் கரனுக்கு தொடர் நாயகன் விருதும் அதோடு சேர்த்து வழங்கப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாகவே தற்போது இந்த சர்ச்சை வெடித்துள்ளது. ஏனெனில் ஐசிசி ரசிகர்களின் வாக்கெடுப்பின்படியே தொடர் நாயகன் விருதினை அளிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் விராட் கோலிக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்திருந்தன. இதனால் அவரே இந்த டி20 உலககோப்பை தொடருக்கான தொடர்நாயகனாக அறிவிக்கப்படுவார் என்று நம்பப்பட்டது.

இதையும் படிங்க : எப்படியாவது வாங்கிடுங்க சிஎஸ்கே – டி20 உ.கோ’யில் கோலியை முந்தி வரலாற்று உலக சாதனை படைத்த சாம் கரண், ரசிகர்கள் கோரிக்கை

ஆனால் இப்படி இறுதியில் விராட் கோலியை தவிர்த்து சாம் கரனுக்கு தொடர் நாயகன் விருதினை வழங்கி ஐசிசி பித்தலாட்டம் செய்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது தங்களது கேள்விகளை சமூக வலைதளம் மூலமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement