நான் கிரிக்கெட்டில் அவரைப்போன்றே அற்புதமான வீரராக மாற விரும்புகிறேன் – சாம் கரன் விருப்பம்

curran 1
- Advertisement -

இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சாம் கரன் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 24 டெஸ்ட் போட்டிகள், 16 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 24 வயதே ஆன சாம் கரன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். இதன் காரணமாக தற்போது மூன்று வகையான இங்கிலாந்து அணியிலும் முதன்மை வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

Curran

- Advertisement -

இந்நிலையில் அவர் தனது கரியரில் பென் ஸ்டோக்சை போன்ற சிறப்பான ஆல்ரவுண்டராக மாற முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரை அடுத்து சில நாட்களிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

தற்போது 31 வயதே ஆகும் பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியான போட்டிகளின் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100 சதவீத பங்களிப்பையும் அணிக்கு வழங்க முடியவில்லை என்ற காரணத்தை முன்வைத்து இனி தான் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறி ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவரது இந்த ஓய்வு அனைவரது மத்தியிலும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

Sam Curran

இந்நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் உடனான தொடர்பு குறித்து பல வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்த அணியின் இளம் வீரரான சாம் கரன் தான் பென் ஸ்டோக்ஸ் போன்று விளையாட முயற்சிக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட்டில் எப்பொழுதுமே பென் ஸ்டோக்ஸின் செயல்பாட்டை நான் உற்று கவனித்து வருகிறேன்.

- Advertisement -

அவரைப் போன்றே ஒரு அற்புதமான ஆல்ரவுண்டராக விளையாட நான் விரும்புகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றது எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய இழப்புதான். அவரை ஒருநாள் அணியில் நாங்கள் மிகவும் மிஸ் செய்வோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என எதைப் பற்றியும் யோசிக்காமல் இந்த இரண்டு துறைகளிலுமே அவரைப் போன்று சிறப்பான வீரராக மாற முயற்சிக்கப் போகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : வாய்ப்பை வீணடிக்கவில்லை, இன்னும் பெரிய அளவில் சாதிப்பாரு – பாராட்டும் இர்பான் பதான்

நிச்சயம் இனி வரும் போட்டிகளில் பென்ஸ் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக எவ்வாறு சிறப்பாக செயல்பட்டாரோ அதேபோன்று நானும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement