IND vs WI : வாய்ப்பை வீணடிக்கவில்லை, இன்னும் பெரிய அளவில் சாதிப்பாரு – பாராட்டும் இர்பான் பதான்

pathan 1
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை வைத்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ள இந்திய அணி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஏனெனில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பங்காற்றி வருகிறார்.

Deepak Hooda

- Advertisement -

அந்த வகையில் இளம் சுழல்பந்து ஆல்-ரவுண்டரான தீபக் ஹூடா முதல் போட்டியில் முக்கியமான 27 ரன்களை எடுத்து பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் 5 ஓவர்களை வீசி 22 ரன்கள் மட்டும் கொடுத்து அசத்தினார். அதேபோல் 2-வது போட்டியிலும் சஹால் ரன்களை வாரி வழங்கிய போது அவருக்கு நிகராக 9 ஓவர்கள் வீசிய அவர் 1 விக்கெட்டை எடுத்து 42 ரன்களை மட்டுமே கொடுத்து மிகச் சிறப்பாக பந்து வீசினார். மேலும் பேட்டிங்கிலும் 312 ரன்கள் துரத்தும்போது கடைசி நேரத்தில் முக்கியமான 33 ரன்கள் எடுத்தார்.

பதான் வளர்ப்பு:
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான இவர் அதன்பின் ஐபிஎல் 2022 தொடரிலும் லக்னோ அணிக்காக அதிரடியாக 400க்கும் மேற்பட்ட ரன்களை விளாசினார். இருப்பினும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் வாய்ப்பு பெறாத அவர் அதைத் தொடர்ந்து நடந்த அயர்லாந்து டி20 தொடரில் தனது முதல் சதமடித்தை விளாசி சஞ்சு சாம்சனுடன் 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாறு படைத்தார்.

Deepak Hooda 104

அதன்பின் நடந்த இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர்கள் இருந்ததால் வாய்ப்பு பெறாத இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கி வருகிறார். மொத்தத்தில் வருங்கால இந்திய அணியின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படும் இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடிய போது கேப்டன் க்ருனால் பாண்டியா தம்மை திட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். அதனால் ஒருதலைப்பட்சமாக அம்மாநில கிரிக்கெட் வாரியம் தடை செய்ததால் மனமுடைந்த தீபக் ஹூடா தடுமாறிய போது முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அவருக்கு அதிகப்படியான ஆதரவைக் கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்த அவர் அம்மாநில அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்து நுணுக்கங்கள் அடிப்படையிலும் இர்பான் பதான் முக்கிய பயிற்சிகளைக் கொடுத்தார். அதை கச்சிதமாக பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் தீபக் ஹூடா தற்போது இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திர இளம் வீரராக உருவெடுத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் இர்பான் பதான் இன்னும் 5 – 6 வருடங்கள் விளையாடினால் பெரிய அளவில் சாதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

irfan-pathan

“2 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று ஹூடாவே நினைக்கவில்லை. ஆனால் கிடைக்கும் வாய்ப்பில் கடினமாக உழைத்து மிகச் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு இன்று உதாரணமாக திகழ்கிறார். அவரால் இந்திய அணிக்கு வரும் காலங்களில் என்ன பங்காற்ற முடியும் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். தற்போது 27 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் அடுத்த 6 – 7 வருடங்கள் சிறப்பாக விளையாடினால் இந்தியாவுக்காக நிறைய சாதிக்க முடியும்”

- Advertisement -

“நீங்கள் எதையாவது எதிர்பார்த்து பயிற்சி எடுத்து விளையாடினால் நிச்சயமாக எதுவும் கிடைக்காது என்று அவரிடம் நான் கூறியுள்ளேன். எனவே பலனை எதிர்பாராமல் உங்களின் சிறந்தவற்றை கொடுக்கும் வகையில் பயிற்சி எடுக்குமாறு கூறியுள்ளேன். அதன் பலனாக உங்களுக்கு வழியில் வெற்றி வந்தால் சிறப்பாக இருக்கும், இல்லையேல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்”

Deepak Hooda Dinesh karthik IND vs IRE

“அவரது ஆஃப் சைட் ஆட்டம் அவருக்கு சற்று தடையாக இருந்தது. அதற்கு அவர் தனது கைகளை நிதானமாக வைத்து உடலுடன் குத்தாமல் இருக்க வேண்டும் என்று கூறினேன். அதனால் தனது கைகளை தளர்வுடன் அவர் விளையாட தொடங்கியபோது வெவ்வேறு ஷாட்களை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் போட்டியை பொறுத்து தன்னுடைய பேட்டிங் வடிவம் ஆகியவற்றை மாற்றிக்கொள்ள கற்றுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : நல்ல தொடக்கத்தை வீணடிக்காதீங்க, திறமையான இளம் இந்திய வீரருக்கு பாக் வீரர் கோரிக்கை

மேலும் வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி வெவ்வேறு பகுதிகளில் ரன்கள் அடிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். இதையெல்லாம் நாங்கள் இணைந்து உருவகப்படுத்தினோம்” என்று கூறினார்.

Advertisement