அடுத்த வருஷம் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான வெற்றி கூட்டணி

இந்த வருட ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மிக மோசமாகவே அமைந்துள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் அவர்கள் இழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 4 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என 8 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது. இருப்பினும் சி.எஸ்.கே அணிக்கான ரசிகர்களின் ஆதரவு சற்றும் குறையவில்லை.

இந்நிலையில் இந்த தொடர் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணி தயாராகும் விதமாக மீதமுள்ள போட்டிகளில் விளையாட உள்ளது என்று டோனி ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் சிஎஸ்கே அணியில் வயதான வீரர்கள் அதிகம் இருப்பதால் அடுத்த ஆண்டு நிச்சயம் பல இளம் வீரர்கள் அணியில் இடம்பிடித்து விளையாடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டுக்கான துவக்க வீரர்கள் குறித்து ரசிகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை சமூக வளைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக கலக்கிய இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனை இறக்கிவிடலாம். ஏனெனில் அவரது அதிரடியை இந்த தொடரில் நாம் போதுமான அளவு பார்த்துள்ளோம். மேலும் ஒரு சில போட்டிகளில் அவர் ஓபனராகவும் இறங்கியுள்ளார்.

curran

மேலும் பவர்பிளே ஓவர்களில் அவர் நன்றாக அதிரடியாக விளையாடியும் உள்ளார். அதனால் அவரையும் நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்ட நாயகனாக விளங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் வாய்ப்பு அளிக்கலாம் என்று ரசிகர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

csk opener

லெஃப்ட் அன்ட் ரைட் காம்பினேஷனில் துவக்க வீரர்கள் களமிறங்க அணி நிர்வாகம் விரும்பினால் இவர்கள் சரியாக இருப்பார்கள் என்றும் இனி வாட்சன் மற்றும் டு பிளேசிஸ் ஆகியோர் தேவையில்லை என்றும் இளம் வீரர்களை அணியில் புகுத்தி மீண்டும் சிஎஸ்கே அணிக்குப் புத்துணர்ச்சி கொடுக்கலாம் என்பதே பெரும்பாலான சென்னை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இது குறித்த உங்களது கருத்து என்ன ? என்பதை கமெண்ட் செக்சனில் பதிவிடலாம் நண்பர்களே.