அபரிவிதமான டேலன்ட் இருக்கு. ஆனாலும் சஞ்சு சாம்சன் கஷ்டப்பட இதுவே காரணம் – சல்மான் பட் ஓபன்டாக்

Butt
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் விளையாடும் சீனியர் வீரர்களுக்கு இணையாக அடுத்தகட்ட இந்திய அணியும் தயாராகி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் தவிர்த்து மற்றொரு அணியே தயார் செய்யும் அளவிற்கு வீரர்கள் தற்போது இந்திய அணியில் வாய்ப்புக்காக வரிசையில் நிற்கின்றனர். இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஏற்கனவே நிரந்தரமான வீரர்கள் இடம் பிடித்து விளையாடி வரும் வேளையில் ஷ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, அகர்வால், சுப்மன் கில் என பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

samson

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சு துறையிலும் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் என ஒரு பெரிய லிஸ்டே வெயிட்டிங்கில் உள்ளது. அந்த அளவிற்கு இளம் வீரர்கள் தற்போது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வாய்ப்புக்காக வரிசையில் நிற்கும் சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் ஏழு வருடங்களாக இந்திய அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வருகிறார்.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று ,முடிந்த டி20 தொடரில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளையும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தாமல் விட்டு விட்டார் என்றே கூறலாம். குறிப்பாக மூன்றாவது போட்டியில் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தும் அதனை சஞ்சு சாம்சன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் நல்ல திறமை இருந்தும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

sanju samson

இதுகுறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக ஷாட் விளையாடுகிறார். இருந்தாலும் அவர் 18 ரன்கள், 19 ரன்கள், 20 ரன்கள், 30 ரன்கள் என எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். இதுவே அவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்காமல் போவதற்கு ஒரு மிக முக்கிய காரணமாக மாறிவிடுகிறது. ஏனெனில் அவரிடம் அசாத்திய திறமை இருப்பது உண்மைதான். ஆனால் அதனை அவர் வெளிக்கொண்டுவர தவறி விடுகிறார்.

- Advertisement -

இந்திய அணியில் தற்போது வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களின் பட்டியல் பெரிது என்பதால் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக ரன்களை அவர் குவித்துக் கொண்டே இருந்தால் மட்டுமே அவரால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியும். இல்லை என்றால் நல்ல திறமை இருந்தும் அவரால் இந்திய அணியில் தொடரவே முடியாது என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி 100வது டெஸ்ட் : சாதாரண வீரர் முதல் எதிரணிகளை தெறிக்கவிடும் சாதனையாளர் வரை – ஒரு வரலாற்று அலசல்

ஒருவகையில் அவர் கூறுவதும் உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சஞ்சு சாம்சனின் திறமையை யாரும் இதுவரை குறை கூறவில்லை. ஆனால் அவரால் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க முடியவில்லை அது ஏன் என்பது மட்டுமே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. இதனை போக்கும் வகையில் இனி வரும் வாய்ப்புகளில் தொடர்ந்து ரன்களை குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement