ரிஷப் பண்டை விட பெரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எங்க டீம்ல இருக்காரு – சல்மான் பட் கருத்து

Butt
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் விளையாடி வந்த விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி முழுமையாக மாற்றி விட்டு ஓய்வு பெற்றுள்ளார். அதாவது அவர் வந்த பின்னர் இந்திய அணியில் விளையாடும் விக்கெட் கீப்பர் என்றால் கண்டிப்பாக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்வதுடன் பேட்டிங்கில் அதிரடியாக ரன்களை அடிப்பவராக இருக்கவேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது.

Pant

- Advertisement -

அந்த வகையில் அவருக்கு பின் அவரது வழியில் தற்போது டெல்லியை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனிக்கு பின் இந்திய அணியில் படிப்படியாக வளர்ந்து வரும் இவர் தற்போது 3 வகையான இந்திய அணியின் முதல் தர விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார்.

மிரட்டல் பண்ட்:
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியை மிஞ்சும் வகையில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் கடந்த 2021 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் அதன் சொந்த மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதர இந்திய வீரர்கள் தடுமாறிய போது ரிஷப் பண்ட் மட்டும் தரமான ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக நின்றார்.

pant-1

அந்த தொடரில் சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற அவர் அதன்பின் காபா நகரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 89* ரன்கள் விளாசி 32 ஆண்டுகள் கழித்து அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா மண்ணைக் கவ்வ செய்வதற்கு முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய தேதியில் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக அவர் ஜொலித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தும் இவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாகும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

- Advertisement -

உருட்டும் சல்மான் பட்:
இந்நிலையில் ரிஷப் பண்ட்டை விடத் தரமான விக்கெட் கீப்பர் பேட்டர் தங்களிடம் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இருவருமே பெரிய ஹிட்டர்ஸ். பண்ட் ஒரு மிகப்பெரிய தரத்தை கொண்ட வீரர். ஆனால் அவரைவிட அசாம் கான் நீண்ட தூரத்திற்கு பந்தை அடிக்கக் கூடியவர். அசாம் கானிடம் அபாரமான பலமும் பவரும் உள்ளது.

Butt

அவர் பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்றால் அவரிடம் உள்ள வலுவான கைகள் கொண்டுள்ள பேட்’டை பந்தின் மீது விட்டால் போதும். அவரிடம் பந்தை மிகவும் கடினமாக அடித்து மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கக் கூடிய திறமை உள்ளது. இருவருமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சதங்கள் அடித்துள்ளதால் அதிக அனுபவத்தை கொண்டுள்ளார். மறுபுறம் அசாம் கான் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பெரிய அளவில் விளையாடவில்லை” என கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறும் இளம் பாகிஸ்தான் வீரர் அசாம் கான் முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மொய்ன் கான் மகன் ஆவார். தனது தந்தையைப் போலவே தற்போது ஒரு விக்கெட் கீப்பராக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள அவர் அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கிறார். குறிப்பாக தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் தொடரில் 10 இன்னிங்ஸ்சில் 256 ரன்களை அடித்துள்ள அவர் பெஷாவர் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 45 பந்துகளில் 85 ரன்கள் விளாசி அசத்தினார். அதற்காக உடனே இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை விட சிறந்தவர் என சல்மான் பட் கூறுவது உருட்டும் வகையில் உள்ளதாக இந்திய ரசிகர்கள் அவரை கலாய்க்க துவங்கியுள்ளார்கள்.

Azam Khan Rishabh Pant

கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்:
ஏனெனில் தற்போது 23 வயதுடைய அசாம் கான் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 3 டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதிலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை அறிமுகம் கூட ஆகவில்லை. மறுபுறம் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் பட்டைய கிளப்பி வரும் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் சதம் விளாசி ஆசிய அளவில் பல பிரம்மாண்ட சாதனைகளை படைத்து ஏற்கனவே தன்னை தரமான வீரர் என உலக அரங்கில் நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அப்படி இருக்க இப்படி ஒரு அடிப்படை தத்துவம் கூட தெரியாத சல்மான் பட் இது போன்று உருட்டல் பேச்சுக்களை பேசி இப்போதே அந்த இளம் வீரரின் வாழ்க்கையை முடிக்காமல் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்துள்ளார்கள்.

இதையும் படிங்க : விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டிக்காக நடைபெற்று வரும் சிறப்பு ஏற்பாடுகள் – என்னென்ன தெரியுமா?

குறிப்பாக தற்போது சற்று அதிகப்படியான உடல் எடையுடன் பார்ப்பதற்கு குண்டாக காட்சி அளிக்கும் அசாம் கானை முதலில் பிட்டாக மாற சொல்லுங்கள் அதன் பின் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம் என சல்மான் பட்டிற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இதே உடல் எடையுடன் அவர் இருந்தால் சிங்கிள் எடுக்க வேகமாக ஓடும்போது விழுந்து விடுவார் எனவும் இந்திய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Advertisement