தோனியே கேப்டனாக இருந்தாலும் அந்த டீமால் சாம்பியனாக முடியாது – சல்மான் பட் விளாசல்

butt
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய அணிக்காக மூன்று வகையான கோப்பைகளையும் கைப்பற்றி கொடுத்தவர் என்கிற மாபெரும் சாதனையுடன் திகழ்பவர். 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர், 2011ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்திய அனைத்து தொடர்களையும் இந்திய அணிக்கு தலைமை தாங்கி வென்று கொடுத்தவர்.

Dhoni-1

- Advertisement -

காலத்தால் என்றும் மறக்க முடியாத மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்பட்டு வரும் தோனிக்கு இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் பெரிய பெயர் உள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கேப்டனாக சொதப்பி வரும் பாபர் அசாமுக்கு ஆதரவாக தற்போது ஒரு கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மஹேந்திர சிங் தோனி குறித்து அவர் பேசிய விடயம் தற்போது பலராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் சல்மான் பட் கூறுகையில் : தோனி வங்கதேச அணியின் கேப்டனாக இருந்து செயல்பட்டாலும் கூட அந்த அணியை அவரால் அழைத்துக் கொண்டு சென்று சாம்பியனாக முடியாது.

Ban

ஏனெனில் அது முடியாத காரியம். அதேபோன்றுதான் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் அசாம் கராச்சி கிங்ஸ் அணியை வழிநடத்திச் என்றாலும் அந்த அணியில் உள்ள வீரர்களின் குறைபாடு காரணமாக அந்த அணி தொடர்ச்சியாக 8 தோல்விகளை தழுவியுள்ளது. இதில் பாபர் அசாம் மீது எந்த குறையும் கிடையாது.

- Advertisement -

வங்கதேச அணிக்கு கேப்டனாக தோனியோ அல்லது ரிக்கி பாண்டிங்கையோ நியமித்தால் கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது. அதே போன்று தான் தற்போது கராச்சி அணியின் நிலைமை உள்ளது. கராச்சியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் மற்ற வீரர்கள் என எந்த ஒரு சிறப்பான வீரரும் இல்லை. அந்த அணியில் இடம்பெற்றுள்ள 11 பேரில் 7 பேர் ஆல்ரவுண்டர் கள்.

இதையும் படிங்க : அறிமுக போட்டியிலேயே வரலாற்றில் இடம்பிடித்த ரவி பிஷ்னோய் – குவியும் வாழ்த்துக்கள்

அதனால் அவர்களை வைத்து அந்த அணியால் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கராச்சி அணி தொடர்ந்து சிக்கலை சந்தித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஒரு கத்துக்குட்டி அணிக்கு தோனியை கேப்டனாக ஒப்பிட்டு பேசி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க முடியாது என்று அவர் கூறிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement