அறிமுக போட்டியிலேயே வரலாற்றில் இடம்பிடித்த ரவி பிஷ்னோய் – குவியும் வாழ்த்துக்கள்

Bishnoi-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கொல்கத்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய 21 வயது மட்டுமே நிரம்பிய ரவி பிஷ்னோய் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் முழுவதுமாக 4 ஓவர்கள் பந்துவீசி அவர் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதிலும் குறிப்பாக அவர் ரோஸ்டன் சேஸ் மற்றும் ரோமன் பவல் ஆகியோருடைய விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தியது அந்த அணியில் ரன் குவிப்பை மட்டுப்படுத்தியது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் நிக்கலஸ் பூரன் அடித்த பந்தை கேட்ச் பிடித்த அவர் பவுண்டரி லைனை மிதித்ததால் சிக்சர் வழங்கப்பட்டது.

bishnoi

அதனால் அவர் சற்று பதட்டமாக இருந்தாலும் பின்னர் பந்துவீச்சின் போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி அவர் பிரமாதமாக பந்து வீசியது அனைவரது வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமின்றி போட்டி முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ரவி பிஷ்னோய் பௌலிங் சிறப்பாக இருக்கிறது என்றும் அவரது பந்து வீச்சில் நிறைய வேறியேஷன்கள் மற்றும் ஸ்கில் செட் ஆகியவை இருப்பதாகவும் வெளிப்படையாக பாராட்டியிருந்தார்.

- Advertisement -

மேலும் அவரின் இந்த சிறப்பான பந்துவீச்சில் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது. இந்நிலையில் ரவி பிஷ்னோய் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதன்படி டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே தங்களது அறிமுகப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்களாக 8 வீரர்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : கப் அடிக்குமா? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு! முழு அணி – உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

தமிழக வீரர்கள் : தினேஷ் கார்த்திக், சுப்ரமணியம் பத்ரிநாத், பிரக்யான் ஓஜா, பிரக்யான் ஓஜா, பரிந்தர் சரன், நவ்தீப் சைனி, நவ்தீப் சைனி, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் இவர்களது பட்டியலில் நேற்று அறிமுகப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்ற ரவி பிஷ்னோய் 9-வது வீரராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement