ஐபிஎல் 2022 : கப் அடிக்குமா? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு! முழு அணி – உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

RCB
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதிலிருந்து இறுதியாக 204 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த 204 வீரர்களை வாங்குவதற்கு மொத்தம் 551 கோடிகள் செலவு செய்யப் பட்டுள்ளன. இந்த ஐ.பி.எல் தொடர் முழுவதுமே கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளன.

RCB

- Advertisement -

இந்த ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் கடந்த வருடம் 32 விக்கெட்களை சாய்த்து ஊதா நிற தொப்பியை வென்று அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்த இந்தியாவின் ஹர்ஷல் படேலை 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு போட்டி போட்டு வாங்கியுள்ளது. அதேபோல் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் சென்னை அணிக்காக கடந்த பல வருடங்களாக முக்கிய வீரராக விளையாடி வந்த தென்னாப்பிரிக்காவின் பாப் டு பிளேஸிஸ் 7 கோடிகளுக்கு இம்முறை பெங்களூரு அணியில் விளையாட உள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக பெங்களூரு அணிக்காக கடந்த 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல், முகமத் சிராஜ் ஆகிய 3 வீரர்களை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது.

rcb

இதை அடுத்து நடைபெற்ற ஏலத்தில் முடிவில் அனுமதிக்கப்பட்ட 25 இடங்களில் 22 வீரர்களை மட்டுமே அந்த அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த 22 வீரர்களை வாங்க அந்த அணி செலவு செய்த 88.45 கோடிகள் போக அந்த அணியிடம் 1.55 கோடி மீதியுள்ளது. அந்த அணியில் வாங்கப்பட்டுள்ள 22 வீரர்களில் 14 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள். அதேபோல 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான முழு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதோ:
விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமத் சிராஜ் (7 கோடி), ஹர்ஷல் படேல் (10.75 கோடி), வணிந்து ஹஸரங்கா (10.75 கோடி), ஜோஷ் ஹெஸல்வுட் (7.75 கோடி), பாப் டு பிளெஸ்ஸிஸ் (7 கோடி), தினேஷ் கார்த்திக் (5.5 கோடி), அனுஜ் ராவத் (3.4 கோடி), ஷபாஸ் அஹமத் (2.4 கோடி), டேவிட் வில்லி (2 கோடி), ஷெரிபான் ருத்தர்போர்ட் (1 கோடி), மஹிபால் லொம்ரோர் (95 லட்சம்), பின் ஆலன் (80 லட்சம்), ஜேசன் பெஹரேண்டோர்ஃப் (75 லட்சம்),
சித்தார்த் கவுல் (75 லட்சம்), கர்ன் சர்மா (50 லட்சம்), சூயஸ் பிரபுதேசாய் ( 30 லட்சம்), சாமா மில்லின்ட் (25 லட்சம்), அநீஸ்வர் கவுதம் (20 லட்சம்), லுவனித் சிசோடியா (20 லட்சம்), ஆகாஷ் தீப் (20 லட்சம்)

bharat 1
bharat RCB

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. இருப்பினும் அந்த அணிக்கான கேப்டன் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில்

ஐபிஎல் 2022 தொடரில் களம் இறங்கப் போகும் உத்தேச 11 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதோ:
பாப் டு பிளேஸிஸ்*, அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்*, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), மஹிபால் லோமரர், ஷபாஸ் அஹமட், வணிந்து ஹஸரங்கா*, ஹர்சல் படேல், ஜோஸ் ஹேசல்வுட்*, முகமத் சிராஜ்.

Advertisement