கோலி மட்டும் தான் தடுமாறுகிறாரா? ஏன் அவரு தடுமாறலயா? – கோலிக்கு ஆதரவாக சல்மான் பட் கேள்வி

Butt
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் மீது கடந்த சில மாதங்களாகவே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் அவர் நடைபெற்ற முடிந்த 15 ஆவது ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 16 போட்டிகளில் விளையாடி வெறும் 341 ரன்களை மட்டுமே குவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலாவது அவர் மீண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த இங்கிலாந்து தொடர் முழுவதுமே 5 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 76 ரன்களை மட்டுமே அடித்தார். இப்படி தனது கரியரில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ள விராட் கோலியின் பார்ம் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு இந்திய அணியில் அவரது இடமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அந்த அளவிற்கு விராட் கோலியின் இடம் ஆபத்தில் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் சமீப காலமாகவே பேட்டிங்கில் சொதப்பி வரும் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் கொடுக்கப்படாமல் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என்னதான் விராட் கோலி ஒருபுறம் தனது பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வந்தாலும் அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது youtube சேனலின் மூலம் அவருக்கு ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூட விராட் கோலி ரன் அடிக்க வேண்டும் என்பதைப் பார்க்க விரும்புகிறார். விராட் கோலி போன்ற ஒரு மாபெரும் வீரருக்கு இந்த சோதனை சில காலம் தான். கோலி ஒரு மாபெரும் வீரர் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எந்த ஒரு வீரருக்கும் மோசமான காலகட்டம் வரும் அந்த வகையில் தற்போது விராட் கோலி ஒரு கடினமான கட்டத்தில் இருக்கிறார்.

- Advertisement -

ஆனாலும் நிச்சயம் கோலி இதிலிருந்து மீண்டு வருவார். நாம் அவரைப் பற்றி விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தால் அவர் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்புவார். கோலி மட்டும்தான் தடுமாறுகிறாரா? இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எந்த பேட்ஸ்மேன் தான் தடுமாறவில்லை. குறிப்பாக ரோகித் சர்மா கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார், தடுமாறுகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

இதையும் படிங்க : அதிர்ஷ்டத்துடன் மெகா போராட்டம் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனை படைத்த பாக் வீரர்

விராட் கோலிக்கு மட்டுமில்லை அனைத்து பேட்ஸ்மன்களுக்குமே சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது அதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமான ஒன்றுதான் என்று விராட் கோலிக்கு ஆதரவாக சல்மான் பட் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement