விராட் கோலியை விட இவரே 3 வகையான கிரிக்கெட்டுக்கும் சிறந்த கேப்டனாக இருப்பார் – சல்மான் பட் கருத்து

Butt-1

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். தலை சிறந்த 3 வீரர்களாக பார்க்கப்படும் இந்த மூன்று வீரர்களும் கடந்த 10 ஆண்டுகளாகவே அந்தந்த நாட்டு அணிகளுக்கான கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் தங்களது அணியை சிறப்பாக வழிநடத்திக் கொண்டு வருகின்றனர். இந்திய அணியில் கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாலும், 2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை.

Kohli

இருப்பினும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. இந்நிலையில் விராட் கோலியை விட மூன்று வகையான கிரிக்கெட்க்கும் சிறந்த கேப்டன் யார் ? என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சல்மான் பட் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை கேன் வில்லியம்சன் தான் சிறந்த கேப்டன் என்று கூறுவேன். ஏனெனில் ரூட் மற்றும் கோலி ஆகியோர் நல்ல கேப்டன்கள் தான். அவர்கள் தங்களது அணிகளை சிறப்பாகவே வழி நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

இருப்பினும் இவர்கள் இருவரையும் தாண்டி பொதுவாக வில்லியம்சன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் நியூஸிலாந்து கடந்த சில ஆண்டுகளாகவே பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதுமட்டுமின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஐ.சி.சி தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணியை கொண்டுவந்துள்ளார். குறிப்பாக அவரது தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி நொடியில் நூலிழையில் கோப்பையைத் தவற விட்டது.

williamson 1

அதனை தொடர்ந்து நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இப்படி மிகப்பெரிய போட்டிகளில் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை அருமையாக வழிநடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தோல்வியடையும் பட்சத்தில் அணி வீரர்களை மனம் தளராமல் அடுத்தடுத்து கொண்டு செல்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் : எதிர்பார்த்தபடி அறிமுகமான வீரர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் – பிளேயிங் லெவன் இதோ

அவரது அந்த குணாதிசயங்களை வைத்தே நான் அவரை சிறந்த கேப்டன் என்று கூறுகிறேன். கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா என எந்த நாடுகளுக்கு சென்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இப்படி கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வில்லியம்சன் மூன்று வகையான கிரிக்கெட் பிரமாதமான கேப்டன்சியை வெளிப்படுத்தி வருகிறார் என்று சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement