முதல் டெஸ்ட் : எதிர்பார்த்தபடி அறிமுகமான வீரர். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் – பிளேயிங் லெவன் இதோ

Rahane

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் சற்றுமுன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ரோஹித் ஓய்வில் இருப்பதனாலும், ராகுல் காயமடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாலும் இன்றைய போட்டியில் மாயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

IND

சற்று முன்னர் நடைபெற்ற டாஸிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரகானே கூறுகையில் : இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் மைதானம் நன்றாக இருக்கிறது. போகப்போக மைதானம் கொஞ்சம் ஸ்லோ ஆகும் என்பதால் முதலில் பேட்டிங் செய்வது நல்லது என்று நினைக்கிறோம்.

- Advertisement -

சீனியர் வீரர்கள் இந்த போட்டியில் விளையாடாதது இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அறிமுக வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். ராகுல் டிராவிடின் தலைமையின் கீழ் விளையாட இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேசினார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

gill

1) சுப்மன் கில், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) ரஹானே, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சஹா, 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) உமேஷ் யாதவ், 11) இஷாந்த் சர்மா.

- Advertisement -
Advertisement