ஏபிடி அளவுக்கெல்லாம் கிடையாது, சூரியகுமாரை பாராட்டிய ஆஸி ஜாம்பவானுக்கு பாக் வீரர் பதிலடி – ரசிகர்கள் அதிருப்தி

Suryakumar Yadav 1
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான வீரர்கள் தங்களது இளம் வயதிலேயே நாட்டுக்காக அறிமுகமாகி விளையாடும் வாய்ப்பை பெற்று சிலர் அசத்துவார்கள் பலர் சுமாராக செயல்பட்டு காணமல் போவார்கள். இருப்பினும் சூரியகுமார் யாதவ் போன்ற சில வீரர்கள் மட்டுமே 30 வயதுக்குமேல் அறிமுகமானாலும் அதை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும் வகையில் அற்புதமாக செயல்பட்டு நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவார்கள். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிய போதிலும் தேர்வுக்குழு கண்டு கொள்ளாமல் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ் ஒரு வழியாக கடந்த வருடம் தனது 30வது வயதில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி குறுகிய காலத்திலேயே இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவாகியுள்ளார்.

Suryakumar yadhav

குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் 4வது இடத்தில் களமிறங்கும் அவர் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்து வெற்றிகளைப் பெற்று கொடுப்பவராக இருப்பதால் வெள்ளைப் பந்து இந்திய அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டதில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் 3வது போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து தம்மால் அனைத்து இடங்களிலும் விளையாட முடியுமென்று நிரூபித்தார்.

- Advertisement -

பாராட்டிய பாண்டிங்:
மேலும் ஒரு வருடமேயானாலும் இதுவரை அவர் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் போல மைதானத்தின் நாலா புறங்களிலும் விதவிதமான ஷாட்களை விளாசி ரன்களை சேர்க்கும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் வெளிப்படையாகவே அவரை இந்தியாவின் ஏபிடி, இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பாராட்டுகிறார்கள்.

அந்த நிலைமையில் தனது உச்சகட்ட பார்மில் இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் சற்று ஏபி டிவில்லியர்ஸ் போல மைதானத்தின் 360 டிகிரியிலும் அதிரடியாக விளையாடுகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐசிசி இணையத்தில் நேற்று பாராட்டியிருந்தார். மேலும் திறமையான அவரை ஓப்பனிங்கில் களமிறக்காமல் அவருக்கு மிகவும் பிடித்த 4வது இடத்தில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார் என்றும் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் கடந்த வருடம் அறிமுகமாகி இந்த வருடம் சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளார் என்பதற்காக நீண்ட காலம் சிறப்பாக செயல்பட்டு யாருமே நினைத்துக்கூட பார்க்காத புதிய ஷாட்டுகளை அறிமுகப்படுத்திய தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் உடன் சூரியகுமார் யாதவை ஒப்பிடுவதில் எந்த அடிப்படையும் கிடையாது என்று ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Ponting

ஏபிடி அளவுக்கில்ல:
“ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாடிய விதத்தை போல் சமீபகால வரலாற்றில் யாருமே விளையாடியதாக எனக்கு தெரியவில்லை. அவரை அவுட் செய்யவில்லையெனில் நம்மால் வெற்றிபெற முடியாது என்று எதிரணியினர் பயப்படும் அளவுக்கு கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். மேலும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்றவர்களும் ஏராளமான சதங்கள் அடித்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்களாக மட்டுமே தங்களை நிரூபித்தார்கள். ரோகித் சர்மா தன்னுடைய நாளில் ஒருநாள் போட்டியில் 250 ரன்கள் விளாசினார். எனவே ரிக்கி பாண்டிங் ஒருவேளை அதிவேகமான ஜெட் போன்ற கனவு கண்டிருக்கலாம்”

- Advertisement -

“அவர் (சூர்யகுமார்) இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார். நல்ல திறமையுடைய அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அதற்காக நேரடியாக ஏபி டிவிலியர்ஸ் உடன் ஒப்பிடுவதா? பாண்டிங் இன்னும் சற்று காத்திருந்திருக்க வேண்டும் எனக்கூறுவேன். அவர் இன்னும் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் விளையாடவில்லை. சொல்லப்போனால் ஏபி டீவில்லியர்ஸ் போல விளையாட இங்கு யாருமே யாருமில்லை. வேண்டுமானால் நீங்கள் அவரை விவ் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிட்டிருக்கலாம்” என்று கூறினார்.

Butt

அவர் கூறுவது போல வெறும் ஆரம்ப காலத்தில் மட்டுமே உள்ள சூரியகுமர் யாதவை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது என்றாலும் இதுவே பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வீரரை ஏபி டிவில்லியர்ஸ் உடன் ரிக்கி பாண்டிங் ஒப்பிட்டு பேசியிருந்தால் சல்மான் பட் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அதைக் கொண்டாடியிருப்பார்கள் என்பதே இந்திய ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : இந்திய அணிக்காக தேர்வானது குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்த – ஷபாஸ் அகமது

மேலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அடுத்தபடியாக டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்தில் உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

Advertisement