நல்ல டேலன்ட் இருந்தும் அதை ஏன் வீணடிக்குறீங்க? இளம் இந்திய வீரருக்கு அட்வைஸ் கொடுத்த – சல்மான் பட்

Salman-Butt
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் நடைபெறும் தொடர்கள், ஐசிசி தொடர்கள் என எந்த தொடராக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் அணி இறுதியில் கோப்பையை தவறவிடுவது வருத்தம் அளிக்கும் விதமாக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

தற்போதுள்ள இந்திய அணியை இரண்டு அணிகளாக பிரிக்கும் அளவிற்கு கூட அணியில் ஏகப்பட்ட வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் சுப்மன் கில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் சமீப காலமாகவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் வீணடித்து வருகிறார் என்றே கூறவேண்டும்.

- Advertisement -

ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது அனைவரது மத்தியில் அதிப்தியை ஏற்படுத்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் திறமை வாய்ந்த சுப்மன் கில் இப்படி அனாவசியமாக விளையாடி அவுட் ஆகக்கூடாது என்று பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உங்களிடம் இருக்கும் திறமைக்கு நீங்கள் அநியாயம் செய்து வருகிறீர்கள். ஏனெனில் உங்களிடம் உள்ள அனைத்து ஷாட்டுகளையும் நீங்கள் விரைவாகவே வெளிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அப்படி நினைத்தால் அது தவறு.

- Advertisement -

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்களை சேர்க்க வேண்டுமெனில் தொடர்ச்சியாக நமது பலம் என்னவோ அதில்தான் பயணிக்க வேண்டும். புதிதாக ஸ்பெஷல் ஷாட் விளையாடுகிறேன் என்று விக்கெட்டை இழக்கக்கூடாது. அதேபோன்று உங்களிடம் அனைத்து திறமையும் இருந்து உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் விளையாடக்கூடாது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

ஒவ்வொரு பந்திற்கும் எப்படி விளையாட வேண்டும் என்பதை உணர்ந்து ரியாக்ட் செய்து பந்திற்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும். அப்போதுதான் தொடர்ச்சியான நிலையான ஆட்டம் உங்களிடம் இருந்து வெளிப்படும் என சுப்மன் கில்லுக்கு சல்மான் பட் அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement