ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றிய வேளையில் நாளை ஜனவரி 17-ம் தேதி மூன்றாவது டி20 போட்டியானது நடைபெற இருக்கிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றி விட்டதால் அணியில் இடம் பிடித்து இருக்கும் மற்ற வீரர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு மாற்றங்கள் தவிர்த்து இந்திய அணியில் வேறு ஏதும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் பெங்களுருவில் நடைபெறவிருக்கும் நாளைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கேப்டன்களாக சச்சின் – யுவராஜ் சிங் மோதும் சிறப்பு போட்டி.. நட்சத்திர முன்னாள் வீரர்கள் கொண்ட 2 அணிகள் விவரம்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) விராட் கோலி, 4) ஷிவம் துபே, 5) ஜிதேஷ் சர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) குல்தீப் யாதவ், 10) அர்ஷ்தீப் சிங், 11) ஆவேஷ் கான்.

Advertisement