கேப்டன்களாக சச்சின் – யுவராஜ் சிங் மோதும் சிறப்பு போட்டி.. நட்சத்திர முன்னாள் வீரர்கள் கொண்ட 2 அணிகள் விவரம்

- Advertisement -

இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான வீரராக போற்றப்படுகிறார். 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் அபாரமாக எதிர்கொண்ட அவர் 100 சதங்கள் விளாசி 2011 உலகக் கோப்பை உட்பட இந்தியாவின் ஏராளமான வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர்.

குறிப்பாக 90களில் பல போட்டிகளில் தனி ஒருவனாக இந்தியாவுக்கு அவர் பெற்றுக் கொடுத்த வெற்றிகளை மறக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து 2013இல் ஓய்வு பெற்ற அவருடைய பல சாதனைகள் இன்றும் உடைக்கப்படாமல் நின்று பேசுகிறது.

- Advertisement -

சிறப்பு போட்டி:
முன்னதாக ஓய்வுக்கு பின் ஆல் ஸ்டார்ஸ், லெஜெண்ட்ஸ் லீக் போன்ற டி20 தொடர்களில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு சிறப்பு கண்காட்சி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாட உள்ளார். “ஒரு உலகம் ஒரு குடும்பம் கோப்பை” என்ற பெயரில் நடைபெற உள்ள அந்த போட்டி வரும் ஜனவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

கர்நாடகவில் பெங்களூருவில் உள்ள முதன்னஹள்ளியில் இருக்கும் சாய் கிருஷ்ணா மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள 5000 கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் ஸ்ரீ சத்யா சாய் சஞ்சீவினி மருத்துவமனை சார்பில் 28000 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கு உதவ நிதி திரட்டும் வகையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

அதற்கு உதவி செய்வதற்காக களமிறங்க உள்ள சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய மற்றொரு ஜாம்பவான் யுவராஜ் சிங் விளையாட உள்ளார். அவர்களின் தலைமையில் இந்தியா மட்டுமில்லாமல் நிறைய ஓய்வு பெற்ற முன்னாள் வெளிநாட்டு வீரர்களும் விளையாட உள்ளனர். இந்த போட்டியை பார்ப்பதற்கு சுனில் கவாஸ்கர் போன்ற 1983 உலகக்கோப்பை வென்ற சில முன்னாள் இந்திய வீரர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உழைப்புக்கு கிடைக்கப் போகும் பரிசு.. ஜெய்ஸ்வால், சிவம் துபேவுக்கு பிசிசிஐ வழங்கப் போகும் பிரமோஷன்

அப்போட்டியில் விளையாடும் சச்சின் தலைமையிலான அணி பின்வருமாறு. சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), நமன் ஓஜா, உபுல் தரங்கா, அல்வீரோ பீட்டர்சன், சுப்பிரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், அசோக் திண்டா, அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், மாண்டி பனேசர், ஆர்பி சிங், டேனி மோரிசன். யுவராஜ் தலைமையிலான அணி: யுவராஜ் சிங் (கேப்டன்), முகமது கைஃப், டாரன் மேடி, அலோக் கபாலி, கழுவிர்த்தனா, யூசுப் பதான், ஜேசன் க்ரேஜா, முத்தையா முரளிதரன், மாக்காயா நிடினி, சமிந்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத்

Advertisement