
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. 2026 டி20 உலகக் கோப்பை தயாராகும் வகையில் இம்முறை அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. அத்தொடருக்கு முன்பாக ஐக்கிய அரபு நாடுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகின்றன.
சார்ஜாவில் நடைபெறும் அத்தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடருக்கு முன்பாக கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அந்த கோப்பையை அறிமுகப்படுத்திய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, அமீரக கேப்டன் முகமது வாசிம் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு செய்தியாளர் ஆசியாவின் 2வது சிறந்த அணி ஆப்கானிஸ்தான் கேப்டன் என்று சொல்லி ரசித் கானிடம் பேசினார். அதை அருகில் அமர்ந்த கேட்ட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தன்னுடைய கன்னத்தில் கைவைத்து கலாய்க்கும் வகையில் புன்னகைத்தார். அதாவது வரலாற்றில் ஆசிய கண்டத்தில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், இலங்கை வெற்றிகரமான அணிகளாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்தியா 2 உலகக் கோப்பைகளை வென்றுள்ள நிலையில் பாகிஸ்தான், இலங்கை தலா 1 உலகக் கோப்பை வென்றுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானை அணியை இந்தியாவுக்கு அடுத்து 2வது சிறந்த ஆசிய அணி என்று சொல்வதைக் கேட்டால் சிரிக்கத் தோன்றுகிறது என்ற வகையில் சல்மான் ஆகா கிண்டலான ரியாக்சனை கொடுத்தார். அந்த ரியாக்சன் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதைப் பார்த்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் 2023 உலகக் கோப்பையில் உங்களை சென்னையில் தோற்கடித்ததை மறந்து விட்டீர்களா? என்று பாகிஸ்தான் கேப்டனை விமர்சித்தார்கள். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இலங்கை, வங்கதேச அணிகளும் தோல்விகளை சந்தித்தன. மறுபுறம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு சென்று சாதனை படைத்தது.
இதையும் படிங்க: 21 சிக்ஸர்கள்.. 272 ரன்கள்.. உச்சகட்ட பார்மில் பொளக்கும் சஞ்சு சாம்சன் – சூடுபிடிக்கும் துவக்க வீரருக்கான இடம்
எனவே இந்தியாவுக்கு அடுத்து ஆப்கானிஸ்தான் 2வது ஆசிய அணி என்பதே உண்மை என்று சல்மான் ஆகாவுக்கு ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் பதிலடியாக கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே அந்தக் கேள்வியை எழுப்பிய ஷாஹித் ஹஸ்மி எனும் செய்தியாளர் தம்முடைய கேள்வியின் பின்னணியை பகிர்ந்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நான் தான் அந்த செய்தியாளர்: 2024 டி20 உலகக் கோப்பையை ஆப்கானிஸ்தான் 2வது சிறந்த ஆசிய அணியாக முடித்ததால் அப்படி கேட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்.