இதை செஞ்சா போதும்.. 2வது சந்திப்பில் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் தயார்.. கேப்டன் சல்மான் பேட்டி

Salman Agha
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. குறிப்பாக 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வீழ்த்தியது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது மிகப்பெரிய சர்ச்சையையும் உண்டாக்கியது.

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பகார் ஜமான் 50 ரன்கள் எடுத்தார். அவருடன் கடந்தப் போட்டியை போல கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஷாஹீன் அப்ரிடி 29* (14) ரன்கள் எடுக்காமல் போயிருந்தால் பாகிஸ்தான் 140 ரன்கள் கூட தொட்டிருக்காது என்பது வேறு கதை.

- Advertisement -

2வது சந்திப்பில் இந்தியா:

அடுத்து விளையாடிய அமீரகத்தை 17.4 ஓவரில் 105 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் எளிதாக வென்றது. அதிகபட்சமாக ராகுல் சோப்ரா 35 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது, ஹரிஷ் ரவூப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அந்த வெற்றியால் செப்டம்பர் 21ஆம் தேதி சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன.

இந்நிலையில் தம்முடைய தலைமையில் கடந்த 4 மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் இதே துபாயில் சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரை வென்றதாக சல்மான் ஆகா கூறியுள்ளார். அதில் பின்பற்றிய திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி அடுத்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

எந்த அணியையும் வீழ்த்துவோம்:

“நாங்கள் வென்றுள்ளோம். ஆனால் பேட்டிங் துறையில் மிடில் ஆர்டரில் முன்னேற வேண்டும். அந்த விஷயத்தில் நாங்கள் வேலை செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து நாங்கள் நல்ல வேலையை செய்துள்ளோம். இன்னும் நாங்கள் எங்களுடைய சிறந்த பேட்டிங்கை செய்யவில்லை. 150 ரன்களை அடிக்கப் பார்க்கும் நாங்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடி எதிரணி யாராக இருந்தாலும் 170 ரன்கள் அடிக்க முயற்சிக்கிறோம்”

இதையும் படிங்க: நீதி வென்றது.. இந்தியாவின் நிரந்தர ஃபிக்ஸர் பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்டார்.. சூர்யகுமாரை விளாசி ரமீஸ் ராஜா பேட்டி

“ஏற்கனவே பந்து வீச்சில் அசத்தும் சாஹின் பேட்டிங்கில் நிறைய முன்னேறியுள்ளார். சாய்ம் ஆயுப் எங்களைப் போட்டியில் மீண்டும் திரும்பக் கொண்டு வரும் திறமையுடையவர். அதை அவர் தொடர்வார் என்று நம்புகிறேன். நாங்கள் எந்த சவாலுக்கும் தயாராக இருக்கிறோம். (இந்திய போட்டி பற்றி) கடந்த 4 மாதங்களில் விளையாடியதைப் போல தொடர்ந்து விளையாடினால் நாங்கள் எந்த எதிரணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவோம்” என்று கூறினார்.

Advertisement