வீரர்களை போல் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்..! – அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா..?

nehra
- Advertisement -

டி20 வரலாறுகளில் ஐ.பி.எல் தொடர் மிகப்பெரிய டி20 தொடராக கருதப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த தொடரில் 8 அணிகளில் ஏலமெடுக்கப்பட்ட பல்வேறு வீரர்கள் கோடிக்கணக்கில் அந்ததந்த அணி நிர்வாகம் சம்பளமாக அளித்துள்ளது. அதே போன்றே இந்த 8 அணிகளில் உள்ள பயிற்சியாளர்களுக்கும் கோடிகளில் சம்பளம் வழங்கபட்டுள்ளது.
flemming .

ஐ.பி.எல் தொடரின் 11 வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையுடன் (மே 27) முடிவடைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த தொடரில் 8 அணிகள் பங்குபெற்று 60 போட்டிகளில் விளையாடியாது. இந்த 8 அணிகளில் உள்ள வீரர்களும் ஏலத்தின் அடிப்படையில் அணி நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு கோடி கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்பட்டனர்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது இல்லை, ஒவ்வொரு அணியில் இருக்கும் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர், ஆலோசகர் என உள்ளவர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெற்ற டாப் 10 பயிற்சியாளர்களின் விவரம் இதோ
vettori

* டேனியல் விட்டோரி,பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் – 4 கோடி

* ஆசிஸ் நெஹரா ,பெங்களூரு அணியின் பவுலிங் பயிற்சியாளர் – 4 கோடி

* ரிக்கி பாண்டிங் ,டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் – 3.7 கோடி

- Advertisement -

* ஸ்டீபன் பிளமிங் ,சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் – 3.2 கோடி

* விரேந்திர சேவாக் ,பஞ்சாப் அணியின் ஆலோசகர் – 3 கோடி

- Advertisement -

* சேன் வார்னே ,ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் – 2.7 கோடி

* ஜாக் காலிஸ் ,கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் – 2.25 கோடி

- Advertisement -

* மஹிலா ஜெயவர்த்தனே ,மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் – 2.25 கோடி

* விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றூம் டாம் மூடி, ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்கள் – 2 கோடி

* கேரி கிரிஸ்டன், பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் – 1.5 கோடி

Advertisement