10 போட்டி கூட முழுசா விளையாடல அதுக்குள்ள மிகப்பெரிய சாதனை பட்டியலில் இணைந்த சைனி – விவரம் இதோ

Saini
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை முன்னிலை வகிக்கிறது.

Saini-1

- Advertisement -

இந்த போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 4 ஓவர்கள் வீசிய சைனி 18 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக குணதிலகாவிற்கு எதிராக வீசிய யார்க்கர் பந்து மற்றும் ராஜபக்சேவிற்கு எதிராக வீசிய பவுன்சர் ஷார்ட் பிட்ச் பந்து என இவரது பந்துவீச்சு டாப் க்ளாஸாக இருந்தன. மேலும் இந்த போட்டியில் தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசிய இவரது வேகம் அனைவரையும் கவர்ந்தது.

மேலும் இந்த போட்டியில் சைனி ஒரு முக்கியமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த போட்டியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக வேகத்தில் பந்து வீசிய இந்திய அணி வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்தபட்டியலில் 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி பும்ரா முதல் இடத்தில் உள்ளார்.

Saini

அதனைத் தொடர்ந்து இசாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இரண்டாமிடத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து சைனி தற்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி மூன்றாவது இடத்தில் இணைந்துள்ளார். உலகளவில் அதிவேக பந்து வீசிய வீரர் என்ற சாதனையை அக்தர் 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement