அறிமுக போட்டியிலே உலகசாதனை படைத்த இளம் வீரர் சைனி – என்ன சாதனை தெரியுமா ?

Saini-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பொல்லார்ட் 49 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பிறகு 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 26 ரன்கள் அடித்தார் ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் சைனி தேர்வானார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக நவதீப் சைனி இடம் பிடித்தார். தனது முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சைனி 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னர் தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, பத்ரிநாத், அக்சர் பட்டேல், சரண் ஆகியோர் இதற்கு முன்னர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement