IPL 2023 : 21 வயசுலயே இப்படி ஒரு ஆட்டமா? போட்டிக்கு போட்டி கலக்கும் தமிழக வீரர் – ரசிகர்கள் பாராட்டு

Sai-Sudharsan
- Advertisement -

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இந்த ஆண்டும் குஜராத் அணி அவரை தொடர்ச்சியாக தங்களது அணியின் பிளேயிங் லெவனில் பயன்படுத்தி வருகிறது. 21 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சன் டிஎன்பிஎல் தொடரிலும் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக தனது பெயரை அனைவரது மத்தியிலும் பேச வைத்திருந்தார்.

Sai Sudharsan

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன் காயம் அடைந்த பிறகு தொடர்ச்சியாக தற்போது விளையாடி வரும் அவர் போட்டிக்கு போட்டி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறார்.

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய அவர் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கினை அளித்திருருந்தார். அதனை தொடர்ந்து வில்லியம்சனுக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடிய அவர் அரைசதம் அடித்திருந்த வேளையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரங்களை குவித்திருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 38 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த நிலையான ஆட்டம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்று வருகிறது. ஏற்கனவே குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா இன்னும் இரண்டு வருடங்களில் சாய் சுதர்சன் இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நீங்க எதுக்கு ஐ.பி.எல் விளையாட வறீங்க? டேவிட் வார்னரை நேரடியாக விமர்சித்த சேவாக் – எதற்கு தெரியுமா?

இந்த போட்டியில் குஜராத் அணி 204 ரன்களை அடித்து இருந்தாலும் கொல்கத்தா அணியின் வீரரான ரிங்கு சிங்கின் அதிரடி காரணமாக அந்த அணி கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement