- Advertisement -
ஐ.பி.எல்

40 லட்சம் 4 விருதுகளை அள்ளிய தமிழக நாயகன் சாய் சுதர்சன்.. கில்லை முந்தி இளம் சூப்பர்ஸ்டாராக சாதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த தொடர் தோல்விகளை உடைத்த பெங்களூரு முதல் கோப்பையை முத்தமிட்டது. மறுபுறம் போராடி தோற்ற பஞ்சாப் முதல் கோப்பையை கோட்டை விட்டது.

அந்தப் போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிக்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 4 விருதுகளை வாங்கியது அனைவரது கவனத்தை எடுத்தது. சமீப வருடங்களாகவே குஜராத் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த வருடம் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 759 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

இளம் சூப்பர்ஸ்டார்:

இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் மிகவும் இளம் வயதில் 700+ ரன்களை அடித்தல் வீரர் என்ற தம்முடைய கேப்டன் சுப்மன் கில் சாதனையை முறியடித்த சுதர்சன் புதிய சாதனையைப் படைத்தார். அந்த சாதனையை சாய் சுதர்சன் 23 வருடம் 227 நாட்களில் படைத்தார். அதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடரின் எமர்ஜிங் பிளேயர் விருதை வென்ற சாய் சுதர்சன் 10 லட்சம் பரிசாக வென்றார்.

இது போக விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்திய அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதற்காக ஆரஞ்சு தொப்பியை வென்ற சுதர்சன் 10 லட்சம் பரிசாகப் பெற்றார். மேலும் இந்த வருடம் அவர் மொத்தம் 88 பவுண்டரிகளை பறக்க விட்டார்.

- Advertisement -

4 விருதுகள்:

அதன் வாயிலாக 2025 ஐபிஎல் தொடரில் அதிக பௌண்டரிகள் அடித்த வீரர் என்ற விருதையும் வென்ற அவர் 10 லட்சம் பரிசாகப் பெற்றார். அத்துடன் இந்த வருடம் ஃபேண்டஸி விளையாட்டில் அவர் அதிக புள்ளிகளைப் பெற்ற வீரராக சாதனையைப் படைத்துள்ளார். அதனால் 2025 ஐபிஎல் தொடரின் ஃபேண்டஸி கிங் என்ற விருதை வென்ற அவர் அதற்காக 10 லட்சத்தைப் பரிசாகப் பெற்றார்.

இதையும் படிங்க: சாம்பியன் ஆர்சிபி’க்கு இத்தனை கோடிகளா? ஐபிஎல் 2025 கோப்பை முழு பரிசுத்தொகை பட்டியல்

மொத்தத்தில் ஐபிஎல் தொடரில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 4 விருதுகளையும் 40 லட்சம் பரிசு தொகையையும் பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த அவர் இந்திய டெஸ்ட் அணியிலும் தேர்வாகியுள்ளார் இதே வேகத்தில் அவர் அடுத்ததாக இங்கிலாந்து மண்ணிலும் அசத்துவதற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -