ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளை உடைத்த பெங்களூரு முதல் கோப்பையை முத்தமிட்டு சாதனைப் படைத்தது. மறுபுறம் போராடி தோற்ற பஞ்சாப் முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நூலிலையில் தவற விட்டது பல ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரில் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகை விவரங்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. முதலில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.
2. ஃபைனல் வரை வந்து போராடி தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு 12.5 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது.
பரிசுத்தொகை விவரங்கள்:
3. குவாலிபயர் 2 போட்டி வரை வந்த தோல்வியை சந்தித்து 3வது இடத்தைப் பிடித்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 கோடி ரூபாய் பரிசை வென்றது.
4. எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து 4வது இடத்தை பிடித்து வெளியேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி 6.50 கோடி ரூபாய்களை பரிசாக பெற்றது.
5. இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சூரியகுமார் யாதவ் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு தொடர்நாயகன் விருதுடன் 15 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.
6. குஜராத் அணிக்காக 759 ரன்களை குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். அவருக்கு ஆரஞ்சு தொப்பியுடன் 10 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.
சுதர்சன் அசத்தல்:
7. குஜராத் அணிக்காக விளையாடி அதிக விக்கெட்களை எடுத்த பிரசித் கிருஷ்ணா ஊதா தொப்பியுடன் 10 லட்சம் பரிசு தொகையை வென்றார்.
8. இத்தொடரில் அற்புதமாக விளையாடிய தமிழகத்தின் சாய் சுதர்சன் வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற ஸ்பெஷல் விருதை வென்று அதற்காக 10 லட்சம் பரிசையும் வென்றார்.
9. அதிக பவுண்டரி அடித்து, அதிக பேண்டஸி புள்ளிகளைப் பெற்றதற்காக 2 ஸ்பெஷல் விருதுகளை வென்ற சாய் சுதர்சன் தலா 10 லட்சம் பரிசாக பெற்றார்.
இதையும் படிங்க: 18வது வருடத்தில் பொருத்தமான வெற்றி.. விராட் கோலி, ஆர்சிபி’க்கு ஜாம்பவான் சச்சின் ஸ்பெஷல் பாராட்டு
10. சிறந்த கேட்ச் பிடித்த ஹைதராபாத் அணியின் கமிண்டு மெண்டிஸ், அதிக டாட் பந்துகளை வீசிய குஜராத்தின் முகமத் சிராஜ் அதற்கான விருதுடன் தலா 10 லட்சம் பரிசை வென்றனர். அதிக சிக்ஸர்களை பறக்க விட்ட லக்னோவின் நிக்கோலஸ் பூரான் அதற்கான விருது மற்றும் 10 லட்சம் பரிசை வென்றார். அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்சி அதற்கான விருதுடன் 10 லட்சம் வென்றார். நேர்மையுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபேர்பிளே விருதையும் 10 லட்சம் பரிசையும் பெற்றது. சிறந்த மைதானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி 50 லட்சம் ஸ்பெஷல் பரிசை தட்டிச் சென்றது.



