IPL 2023 : ஐ.பி.எல் தொடரில் எனது ஆட்டம் சிறப்பாக அமைந்ததற்கு காரணமே இதுதான் – சாய் சுதர்சன் பேட்டி

Sai-Sudharsan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் குஜராத் அணிக்காக விளையாடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Sai Sudharsan

அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 46 பந்துகளை சந்தித்த அவர் 96 ரன்கள் குவித்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே தான் சிறப்பாக விளையாட என்ன காரணம் என்பது குறித்து அவர் பிரத்யேக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து சாய் சுதர்சன் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாட டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியது தான் காரணம் என்று கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : பொதுவாகவே டொமஸ்டிக் போட்டிகளில் நாம் விளையாடும் போது ஒருநாள் கோயம்புத்தூரில் விளையாடுவோம் அடுத்ததாக டெல்லியில் போய் விளையாடுவோம். அதேபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவோம்.

Sai Sudharsan

இப்படி ஆங்காங்கே சென்று விளையாடுவது தான் ஐபிஎல் தொடரிலும் என்னை சிறப்பாக விளையாட வைத்தது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளின் போது ஒருநாள் ஒரு இடத்தில் ஆடிவிட்டு பின்னர் வேறு ஒரு இடத்திற்கு சென்று விளையாடும் போது அந்த சூழ்நிலை வேறுபடும். அவ்வாறு அந்த வேறுபாட்டை நான் சரி செய்து அந்த மைதானத்திற்கு ஏற்றார் போல் சிறப்பாக விளையாட காரணமே டொமஸ்டிக் போட்டிகளில் நான் அதிகமாக விளையாடுவது தான்.

- Advertisement -

இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மைதானத்திற்கு ஏற்ப என்னால் என்னுடைய பேட்டிங் ஸ்கில்களை மாற்றிக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் நான் அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்வதும், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் என்னுடைய பேட்டிங் திறனை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும், சீசன்களிலும் நான் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையும் படிங்க : WTC Final : அவர் இல்லாததால இந்தியா வெற்றி பெற சான்ஸ் கம்மி தான், ஆஸிக்கு அதிக வாய்ப்பிருக்கு – ரவி சாஸ்திரி பேட்டி

என்னுடைய இந்த பேட்டிங் திறனை இதோடு நிறுத்திக் கொள்ளாமல் இனியும் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு விடயங்களை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். இனிவரும் சீசன்கள் என்னுடைய பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பதாக சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement