WTC Final : அவர் இல்லாததால இந்தியா வெற்றி பெற சான்ஸ் கம்மி தான், ஆஸிக்கு அதிக வாய்ப்பிருக்கு – ரவி சாஸ்திரி பேட்டி

Ravi-Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்வியை நிறுத்த போராட உள்ளது.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

குறிப்பாக 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் வென்ற தன்னம்பிக்கையுடன் இந்தியா இப்போட்டியில் களமிறங்க உள்ளது. மறுபுறம் ஏற்கனவே 5 உலகக் கோப்பைகளையும் டி20 உலக கோப்பையும் வென்று கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சிலேயே வென்று சமீப காலங்களில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

சாஸ்திரி கணிப்பு:
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பட் கமின்ஸ் திரும்பியுள்ளது பலமாக பார்க்கப்படும் நிலையில் கடைசி நேரத்தில் ஜோஸ் ஹேசல்வுட் காயத்தால் வெளியேறியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கோ ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகிய 3 துருப்பு சீட்டு வீரர்கள் காயத்தால் பங்கேற்காதது ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கக்கூடிய பும்ரா இல்லாதது வேகப்பந்து வீச்சுத் துறையில் பெரிய பின்னடைவாகும்.

Bumrah

ஏனெனில் யார்கர் பந்துகளை வீசி எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் இந்திய மண்ணை விட இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தான் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் ஷமி, சிராஜ் ஆகியோருடன் பும்ரா இருந்தால் வேகப்பந்து வீச்சு கூட்டணி பலமாக இருக்கும் என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி அவர் இல்லாதது வெற்றிக்கான வாய்ப்பில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவை கொடுப்பதாக கூறியுள்ளார்

- Advertisement -

. அதனால் ஹேசல்வுட் வெளியேறினாலும் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் ஆகியோரை கொண்ட ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு சற்று அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இரு அணிகளின் வேகப்பந்து வீச்சு கூட்டணியின் அட்டாக்கை பாருங்கள். அதில் யார் சிறந்ததை கொண்டிருக்கிறார்கள்? ஒருவேளை பும்ரா இருந்தால் ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு சமமாக இருக்கிறது என்று நான் சொல்வேன். ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவின் அட்டாக்கை நீங்கள் பார்க்கும் போது ஹேசல்வுட் காயத்தால் வெளியேறினாலும் கமின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இருக்கிறார்கள்”

Shastri

“மேலும் ஹேசல்வுட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட மைக்கேல் நீசர் சமீபத்திய கவுண்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஸ்காட் போலாண்ட் தான் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். குறிப்பாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர்களில் பிட்ச்சில் லேசான உதவி கிடைத்தால் அவர் மற்றவர்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த பவுலராக செயல்படும் தன்மையை கொண்டதை நாம் பார்த்தோம். எனவே அவர் நிச்சயமாக ஹேசல்வுட் இடத்தை நிரப்புவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அந்த சீரிஸ்ல பிளாப் ஆன விராட் கோலியிடம் வீக்னெஸ் இருக்கு, ஆனா சச்சின் மாதிரி கில் தரமானவர் – முன்னாள் இந்திய வீரர் அதிரடி

மேலும் இந்த ஃபைனலில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு சற்று அதிகப்படியான வாய்ப்பிருப்பதாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறினார். இது பற்றி அதே நிகழ்ச்சியில் வாசிம் அக்ரமுடன் இணைந்து அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு லேசான அதிக வாய்ப்பிருக்கிறது. இரு அணிகளுக்குமே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. அதே சமயம் கடந்த 2 வருடங்களில் ஆஸ்திரேலியாவை மற்ற அணிகளை விட இந்தியா அதிகமாக தோற்கடித்துள்ளது” என்று கூறினார். மேலும் வாசிம் அக்ரமும் இந்த ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிக வாய்ப்பிருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement