IPL 2023 : இவரைபோய் நம்ம டீம்ல எடுக்காம விட்டுடீங்களே? தமிழக ரசிகர்கள் கோபம் – அப்படி என்ன நடந்தது?

Sai-Sudharsan
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது.

GT

- Advertisement -

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 18.1 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 48 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியில் அவரது ஆட்டத்தை கண்ட தமிழக ரசிகர்கள் சிஎஸ்கே அணி அவரை ஏன் தேர்வு செய்யவில்லை? என்பது போன்ற கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் 21 வயதான சாய் சுதர்சன் தமிழ்நாட்டு அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

Sai Sudharsan

அதுமட்டும் இன்றி கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவரை குஜராத் அணி மிகச்சரியாக பயன்படுத்தியது. அதோடு இந்த ஆண்டு கேன் வில்லியம்சன் குஜராத் அணியிலிருந்து வெளியேறியதன் பின்னர் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்ட 21 வயதான சாய் சுதர்சன் நேற்றைய போட்டியில் விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

உலகத்தரம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராக அசாத்தியமான திறமையுடன் விளையாடிய அவரைப் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் சிஎஸ்கே அணி தொடர்ந்து வயது முதிர்ந்த வீரர்களை தேர்வு செய்து வருவதாலும், வெளிமாநில வீரர்களை தேர்வு செய்து வருவதாலும் தமிழக ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : IPL 2023 : பவுலர்கள் தாறுமாறா ஒய்ட் போடுவதை நிறுத்த அந்த ரூல்ஸை கொண்டு வாங்க – சுனில் கவாஸ்கர் புதிய யோசனை

நேற்றைய போட்டியில் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகிய தமிழக வீரர்கள் தான் குஜராத் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த தொடரின் முதலாவது போட்டியில் கூட சென்னை அணிக்கு எதிராக இம்பேக்ட் பிளேயராக விளையாடிய சாய் சுதர்சன் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் 17 பந்துகளில் 22 ரன்கள் அடித்து குஜராத் அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement