அந்த 2 பேர் சுதந்திரம் கொடுத்துருக்காங்க.. இதை செஞ்சா இந்திய அணி வாய்ப்பு தானா வரும்.. சுதர்சன் பேட்டி

Sai Sudharsan 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ள அந்த அணி சிறப்பாக செயல்படுவதற்கு பேட்டிங் துறையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முக்கிய பங்காற்றி வருகிறார்.

ராஜஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் குவித்த அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுவரை 5 போட்டிகளில் ரன்களை குவித்துள்ள சாய் சுதர்சன் 273 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பிப் பட்டியலில் நிக்கோலஸ் பூரானுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார். இதே போல செயல்படும் பட்சத்தில் பூரானை முந்தி அவர் ஆரஞ்சுத் தொப்பியை வெல்வதற்கும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

முழுமையான சுதந்திரம்:

இந்நிலையில் குஜராத் அணி பயிற்சியாளர் ஆசிஸ் நெஹ்ரா, கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்பை தமக்கு வழங்கியுள்ளதாக சாய் சுதர்சன் கூறியுள்ளார். அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் பெரிய ரன்கள் குவித்தால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தாமாக தேடி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ஆசு பா (நெஹ்ரா), கில் ஆகியோர் பேட்டிங் துறையில் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளார்கள். பேட்டிங் பற்றிய திட்டங்களில் அவர்கள் தலையிடுவதில்லை. நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதை செய்வதற்கான முழு சுதந்திரத்தை அவர்கள் கொடுத்துள்ளார்கள். அதே சமயம் போட்டியில் எப்படி முன்னேற முடியும், இன்னும் சிறந்த ஆப்ஷன் மற்றும் பொருத்தங்கள் பற்றி அவர்கள் எனக்கு ஆலோசனைத் தருகிறார்கள்”

- Advertisement -

இந்திய வாய்ப்பு:

“எப்போதும் சரியான உள்ளீடுகளைக் கொடுக்கும் அவர்கள் அதே சமயத்தில் நான் விரும்பும் வகையில் விளையாடுவதற்கான முழு சுதந்திரத்தைக் கொடுத்துள்ளார்கள். அப்படி முழுமையாக இடைவெளி கிடைக்கும் போது நீங்களும் சில தவறுகள் செய்வீர்கள். அதைச் செய்ய எங்களுடைய அணியில் அனுமதி உள்ளது என்று நினைக்கிறேன். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே அனைவருடைய கனவாக இருக்கும்”

இதையும்படிங்க: இது எப்படி அவுட்டாகும்? வாதிட்ட ரியான் பராக்.. அம்பயர்கள் தவறை அமைதியாய் அமுக்கிய பிசிசிஐ?

“உங்களுடைய திறமையைக் காட்டுவதற்கு ஐபிஎல் போன்ற நல்ல இடம் கிடைத்துள்ளது. அதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கண்டிப்பாக நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும். ஆனால் தற்சமயத்தில் குஜராத் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பதைப் பார்த்து அதற்குத் தகுந்தார் போல் விளையாட கவனம் செலுத்துகிறேன். இங்கே ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி என்னுடைய அணியை வெற்றி பெற வைத்தால் மற்ற வாய்ப்புகள் அனைத்தும் துணை பயனாக என்னைத் தேடி வரும்” என்று கூறினார்.

Advertisement