இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் ஒரு இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடைசி 10 இன்னிங்ஸ்கில் அசத்தி வரும் சாய் சுதர்சன் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 60 ரன்களையும், தமிழக வீர சாய் சுதர்சன் 56 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது லக்னோ அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணியின் துவக்க வீரராக விளையாடிய தமிழக வீரர் சாய் சதர்சன் 37 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 56 ரன்கள் குவித்து அசத்தலான இன்னிங்சை வெளிப்படுத்தியிருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருந்த லக்னோ அணியின் வீரரான நிக்கோலஸ் பூரானை கடந்து அதிக ரன்கள் குவித்த வீரராக இந்த தொடரின் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
நிக்கோலஸ் பூரான் இதுவரை 5 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 288 ரன்கள் அடித்திருந்த வேளையில் சாய் சுதர்சன் இந்த போட்டியின் மூலம் 6 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 329 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருக்கிறார்.
இதையும் படிங்க : வெற்றிக்கான பவரை விடாதீங்க.. 30 ரன்ஸ் அடிச்சுட்டு தோனி சொல்றதை ஏத்துக்கு முடியாது.. ஹைடன் விமர்சனம்
அதிலும் குறிப்பாக கடைசியாக சாய் சுதர்சன் விளையாடிய 10 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் ஏழு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் என எட்டு போட்டிகளில் அரைசதத்தை கடந்துள்ளார். இதன் மூலம் நிச்சயம் அவர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கும் வாய்ப்புக்கான போட்டியில் இருப்பார் என்று தெரிகிறது.



