தம்பி உன்ன மாதிரி டேலன்ட் தான் எங்களுக்கு வேனும்.. தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு மெடல் வழங்கி கவுரவித்த – இந்திய அணி

Sai-Sudharsan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியே தென் ஆப்பிரிக்க மண்ணில் அவர்களுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக தேர்வாகி இருந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் துவக்க வீரராக மூன்று போட்டியிலும் இடம்பெற்று அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

குறிப்பாக முதல் இரண்டு போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்திய அவர் மூன்றாவது போட்டியில் பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், தனது மிகச்சிறப்பான பீல்டிங்கின் மூலம் அசர வைத்தார். டி.என்.பி.எல் தொடர், ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் என அனைத்திலுமே அசத்தலாக செயல்பட்டு வந்த சாய் சுதர்சனுக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அவர் தான் எப்படிப்பட்ட ஒரு திறமையான வீரர் என்பதை முதல் தொடரிலேயே நிரூபித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் அவர் அற்புதமாக செயல்பட்டதால் அவருக்கு இந்த ஒருநாள் தொடருக்கான சிறந்த பீல்டர் என்ற விருதை வழங்கி இந்திய அணியின் நிர்வாகம் தமிழக வீரராக சாய் சுதர்சனை கௌரவித்துள்ளது. அந்த வகையில் மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் ஓய்வறையில் நடந்த மீட்டிங்கின் போது :

இதையும் படிங்க : சச்சினுக்கு தோனிக்கும் கிடைத்த கவுரவம் சீக்கிரமா இவங்க 2 பேருக்கும் கிடைக்கும் – சுனில் கவாஸ்கர் கருத்து

சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பாராட்டிய நிர்வாகம் இந்த தொடரில் அற்புதமாக பீல்டிங் செய்த சாய் சுதர்சனை வாழ்த்தி அவருக்கு சிறந்த பீல்டருக்கான மெடலையும் வழங்கி கௌரவித்தது. குறிப்பாக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது கிளாஸன் அடித்த பந்தை அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்த சாய் சுதர்சனின் அந்த முயற்சியை பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement