தென்னாப்பிரிக்க கீப்பர் செய்த தவறால் அறிமுகப்போட்டியில் அரைசதம் கடந்த சாய் சுதர்சன் – நடந்தது என்ன?

Sai-Sudharsan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. டிஎன்பிஎல் தொடரில் ஆரம்பித்த அவரது பயணம் அடுத்தடுத்து உள்ளூர் தொடர், ஐபிஎல், இந்தியா ஏ அணி என பல தரப்பிலும் சிறப்பாக அமைந்தது.

இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெற்ற சுதர்சன் துவக்க வீரராக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேசிங் செய்ய தயாரானது.

அந்தவகையில் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாடுடன் சாய் சுதர்சன் துவக்க வீரராக களமிறங்கினார். பின்னர் ருதுராஜ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சாய் சுதர்சன் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் குவித்து அசத்தினர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் 52 ரன்களை எடுத்து வெளியேறியிருந்தாலும் சாய் சுதர்சன் ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் குவித்து அசத்தினார். அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்த இவரது ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பரான கிளாஸஸ் செய்த தவறினாலே அவர் அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பித்து அரைசதம் அடித்துள்ளார்.

ஆம் இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து அட்டகாசமாக ஆட்டத்தை துவங்கிய சாய் சுதர்சன் அந்த ஓவரிலேயே பர்கர் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதற்கு பவுலரும் அப்பீல் செய்தார் ஆனால் அம்பயர் விக்கெட் கொடுக்கவில்லை. அதனால் பவுலர் டி.ஆர்.எஸ் கேட்கலாம் என்று கேப்டனிடம் முறையிட்டார்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஓவர்.. தெ.ஆ தொடரிலிருந்து விலகிய இஷான் கிசான்.. மாற்று வீரர் அறிவிப்பு

ஆனால் விக்கெட் கீப்பர் கிளாசன் பந்து லெக் ஸ்டம்பை தாண்டி சென்றுவிட்டது என்று கூறி பவுலரை மீண்டும் பந்துவீசும் படி கேட்டுக் கொண்டார். பின்னர் ரீப்ளேவில் பார்க்கும் போது பந்து ஸ்டம்பில் அடித்தது தெரியவந்தது. அந்த ரீப்ளேவை பார்த்த கிளாசனும் கேப்டன் மார்க்ரமிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அந்த அதிர்ஷ்டத்தில் விக்கெட்டில் இருந்து தப்பித்த சாய் சுதர்சன் அற்புதமாக விளையாடி 55 ரன்கள் குவித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement