
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.
அதில் சதத்தை நெருங்கிய ராகுல் 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடி அசத்தினார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து 58 ரன்னில் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சுதர்சன் அரை சதத்தை நெருங்கினார். எதிர்ப்புறம் வந்த ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது பாதத்தில் காயத்தை சந்தித்து நடக்க முடியாமல் வெளியேறினார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சுதர்சன் அரை சதத்தை அடித்தார்.
இதன் வாயிலாக 2022க்குப்பின் ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சுதர்சன் பெற்றுள்ளார். கடைசியாக 2022ஆம் ஆண்டு புஜாரா 3வது இடத்தில் களமிறங்கி 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருந்தார். அது போக மான்செஸ்டர் மைதானத்தில் 35 வருடங்கள் கழித்து 3வது இடத்தில் களமிறங்கி 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சுதர்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடைசியாக 1990 மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் தற்போது பிரபல விமர்சகராக இருக்கும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் 94, 50 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் சதத்தை வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 61 ரன்களில் சுதர்சன் அவுட்டாகி தம்முடைய விக்கெட்டை இழந்தார்.
இதையும் படிங்க: 58 ரன்கள் எடுத்து அவுட்.. சுனில் கவாஸ்கருக்கு அடுத்து 50 ஆண்டுகால சாதனையை நிகழ்த்திய – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
அதனால் இந்த பதிவிடும் போது இந்தியா 243/4 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தாகூர் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இங்கிருந்து இந்தியா 300 ரன்கள் தாண்டினால் மட்டுமே இங்கிலாந்துக்கு சவாலை கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.