
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது. அதன் அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டிகள் முதலில் விளையாடிய :
கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவிக்க கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியின் போது குஜராத் அணியின் சார்பாக துவக்க வீரராக விளையாடிய தமிழக துவக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் 28 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 53 ரன்கள் எடுத்திருந்தார். அவர் அடித்த இந்த 53 ரன்கள் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷான் மார்ஷின் மாபெரும் சாதனை ஒன்றினை டி20 போட்டிகளில் முறியடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரராக ஷான் மார்ஷ் 85 இன்னிங்சில் 3000 ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். அதுவே இதுவரை சாதனையாக இருந்தது. இவ்வேளையில் நேற்றைய போட்டியின் மூலம் 78 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்து ஷான் மார்ஷின் அந்த சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் முதல் முறையாக நிகழ்ந்த அரிதான சம்பவம்.. விசித்திரமான சாதனை – விவரம் இதோ
அதுமட்டும் இன்றி நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய சாய் சுதர்சன் இந்து தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களையும் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.