கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய :
டி20 போட்டிகளில் முதல் முறையாக நடைபெற்ற சம்பவம் :
கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவித்தது. பின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் எப்போதும் இல்லாத ஒரு விசித்திரமான சாதனை முதல் முறையாக அரங்கேறியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்று நிகழ்ந்த சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சார்பாக பின் ஆலன் 93 ரன்கள், அன்க்ரிஷ் ரகுவன்ஷி 82 ரன்கள், கேமரா கிரீன் 52 ரன்கள் குவித்தனர். அதே போன்று குஜராத் அணி சார்பாக விளையாடிய சுப்மன் கில் 89 ரன்கள், ஜாஸ் பட்லர் 57 ரன்கள், சாய் சுதர்சன் 53 ரன்கள் குவித்தனர்.
இதையும் படிங்க : முதல் வெளிநாட்டு வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – சுனில் நரேன்
இப்படி இரண்டு அணியிலும் தலா மூன்று வீரர்கள் அரைசதம் அடித்தனர். இப்படி டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் மொத்தம் ஆறு வீரர்கள் அரைசதம் அடித்தது இதுவே முதல்முறை. கொல்கத்தா அணி பெற்ற வெற்றியின் மூலம் தற்போது பிளே ஆப் சுற்றுக்கான 4 ஆவது இடத்திற்கான போட்டி மேலும் கடுமையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



