
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்தியாவில் துவங்கி நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் பங்கேற்று இருந்த வேளையில் தற்போது டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர்.
இவ்வேளையில் மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்த துலீப் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகமாகி அசத்தலாக செயல்பட்ட சாய் சுதர்சனுக்கும் துலீப் டிராபி தொடரில் இடம் கிடைத்துள்ளது.
அந்த வகையில் அவர் தற்போது துலீப் டிராபி தொடரின் இறுதி கட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் வேளையில் அடுத்தடுத்து இன்னும் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் இந்த தொடரில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில் இந்திய அணியில் உள்ள முதன்மை வீரர்களுக்கு யாரேனும் காயம் அடைந்தால் அவர்களுக்கு பதிலாக துலீப் டிராபி தொடரில் அசத்தலாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தமிழக வீரரான சாய் சுதர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சாய் சுதர்சன் சதம் அடித்து அசத்தியுள்ளார். துலீப் டிராபி தொடரில் அவரது செயல்பாடு தேர்வுக்குழுவினரை திருப்தியடைய வைத்துள்ளதால் நிச்சயம் டெஸ்ட் அணியில் அவர் விரைவில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஆஸி மண்ணில் ஜெய்க்க.. அந்த 2 பேர் இந்தியாவின் வெற்றிக்கான சாவியா இருப்பாங்க.. இயன் சேப்பல் பேட்டி
மேலும் இந்திய அணியில் தற்போது டாப் ஆர்டர் வீரர்களில் யாரும் இடதுகை வீரர்கள் இல்லை என்பதனால் நிச்சயம் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதோடு சாய் சுதர்சனிடம் அதிரடியான பேட்டி மட்டுமின்றி சிங்கிள்ஸை ரொட்டேட் செய்யும் திறமையும் இருப்பதினால் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.