இந்திய அணியின் அடுத்த ரவீந்திர ஜடேஜா ரெடி.. இப்படி தமிழக வீரர் சாய் கிஷோரை ரசிகர்கள் கொண்டாட – காரணம் என்ன?

Sai-Kishore
- Advertisement -

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணியின் கேப்டனாக விளையாடி வரும் சாய் கிஷோர் நடப்பு 2024-ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக தற்போதைய இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தினை பிடித்து விளையாடி வரும் வேளையில் வெகு விரைவில் சாய் கிஷோர் இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள ரஞ்சி தொடரில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள சாய் கிஷோர் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமின்றி இந்த ரஞ்சி தொடர் முழுவதுமாக 53 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

அதோடு இந்த ரஞ்சி தொடரில் மற்ற வீரர்கள் யாரும் 41 விக்கெட்டுகளை கூட எடுக்காத நிலையில் சாய் கிஷோர் 50 விக்கெட்டுகளை தாண்டி அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் 6 முறை 4 விக்கெட்டுகளையும், 3 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். எனவே சாய் கிஷோர் தான் அடுத்த ரவீந்திர ஜடேஜா என்று ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஏனெனில் தற்போது 35 வயதாகும் ரவிந்திர ஜடேஜா இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும் வேளையில் அவருக்கு பதிலாக தரமான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வேண்டுமென்றும் அதே போன்று ரவீந்திர ஜடேஜா அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு பேட்டிங் தெரிந்த வீரர் என்று பார்க்கையில் சாய் கிஷோருக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நல்ல உயரம் கொண்ட சாய் கிஷோர் பந்துகளில் அதிக வேரியேஷன்களை வைத்திருப்பதாலும், அக்சர் படேலை விட பந்தை நன்றாக ஸ்பின் செய்யும் திறன் உடையவராகவும் இருப்பதனால் வெகுவிரைவில் அவர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது பேட்டிங்கில் டாப் ஆர்டரில் களமிறங்கும் சாய் கிஷோர் பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாகவே கை கொடுக்கக் கூடியவர் என்பதனால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தெளிவா இல்லைனா காலி.. அஸ்வின் – நேதன் லயனுக்கு இடையே உள்ள வித்யாசம் பற்றி ரூட் பேட்டி

தற்போது 27 வயதான தமிழக வீரர் சாய் கிஷோர் கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் தொடரில் இந்திய அணிக்காக 3 டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement