தோனியின் சாதனையை சமன் செய்த சஹா. பிங்க் பால் டெஸ்டில் சாதனை – விவரம் இதோ

Saha-3
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

saha 1

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்களே முழுமையாக பந்து வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 1 ஓவர் மட்டுமே வீசினார். இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஹாவின் கீப்பிங் அபாரமாக இருந்தது. பந்து எந்த திசைக்கு சென்றாலும் பாய்ந்து பாய்ந்து பிடித்தார் மேலும் இந்த போட்டியில் சஹா தோனியின் ஒரு சாதனையும் சமன் செய்தார்.

saha 2

அதாவது இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி (35 போட்டிகள்) வைத்திருந்தார். அந்த சாதனையை இன்றைய போட்டியின் முதல் கேட்சை பிடிக்கும்போது சஹா சமன் செய்தார். அதாவது தனது 35 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சஹா இதுவரை 90 கேட்ச்கள் மற்றும் 11 ஸ்டம்பிங் என 101 விக்கெட்டுகள் விழ காரணமாக அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement