IND vs WI : 76-ஆவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்த கிங் கோலிக்கு வாழ்த்து சொன்ன சச்சின் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Sachin-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அனுபவ வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் சதம் அடிக்காமல் இருந்து வந்த அவரின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்திருந்தது.

இவ்வேளையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். கடைசியாக 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் அயல்நாட்டு சதத்தினை அடித்திருந்த விராட் கோலி அதன் பிறகு ஐந்து ஆண்டுகளாக கழித்து இந்தப்போட்டியின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் 34 வயதான விராட் கோலி தனது 111 டெஸ்ட் போட்டியில் 29-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் 500-ஆவது போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். மேலும் பிராட் மேனின் 29 டெஸ்ட் செஞ்சுரிகள் சாதனையையும் அவர் சமன் செய்து தற்போது அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 76 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதமும், ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதமும், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என 76 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

அதேவேளையில் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதம் என 100 சதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 செஞ்சுரிகள் சாதனையை தொடுவதற்கு இன்னும் விராட் கோலிக்கு 24 சதங்களே தேவை என்கிற நிலையில் நிச்சயம் விராட் கோலி அவரது கரியரில் இந்த சாதனையை அவர் தொடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க : கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய 3 இந்திய கிங்ஸ்’களை 40 வருடங்களில் இணைத்த குயின்ஸ் பார்க் மைதானம் – ஆச்சர்ய புள்ளிவிவரம் இதோ

இந்நிலையில் சர்வதேச போட்டியில் 76-ஆவது சதம் அடித்த விராட் கோலியின் இந்த செயலை பாராட்டும் விதமாக சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் : “அனதர் டே”, “அனதர் செஞ்சரி”, “பை விராட் கோலி” வெல் பிளேயிடு என சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டினை இன்ஸ்டாகிராம் வாயிலாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement