சென்னையில் இருக்கும் இவரை நான் பார்க்கவேண்டும். எப்படியாவது உதவுங்கள் – சச்சின் வேண்டுகோள்

sachin

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது அபாரமான பேட்டிங் மூலம் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கர் படைக்காத சாதனைகளே இல்லை என்றும் கூறலாம்.

sachin

ஆனால் அவருக்கு சென்னையை சேர்ந்த தாஜ் ஹோட்டல் வெயிட்டர் கொடுத்த ஒரு குறிப்பு உதவி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் அது உண்மைதான் அது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒருமுறை டெஸ்ட் போட்டிக்காக சென்னை வந்திருந்தபோது தாஜ் ஹோட்டலில் சச்சின் தங்கி இருந்தாராம்.

அப்போது அங்கு அங்கிருந்த வெயிட்டர் ஒருவர் சச்சினுக்கு டீ கொடுத்ததாகவும் அந்த டீயை சச்சின் குடிக்கத் தொடங்கிய போது அவரிடம் பேச்சுக் கொடுத்து நீங்கள் முழங்கையில் கட்டியிருக்கும் பேடை அணிந்து ஆடினால் உங்களுடைய ஆட்டம் வேறுபடுகிறது. அதனால் நீங்கள் பேட்டை வீசும் முறையும் மாறுகிறது என்று அவர் கூறினாராம். அப்போது வரை சச்சின் அந்த விடயம் குறித்து யாரிடமும் பேசியது கூட கிடையாது.

ஆனால் ரசிகர் கூறிய அந்த ஆலோசனை அவரைக்கு ஆச்சிரியத்தில் ஏற்படுத்தியதாம் மேலும் அவரது பேட்டிங்கிலும் பெரிய மாற்றத்தை கொடுத்ததாம். இந்நிலையில் இந்த சம்பவத்தை தமிழில் தெளிவாக பதிந்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஆலோசனையை சொன்ன அந்த நபரை தான் தேடுவதாகவும் அவரை சந்திக்க ஆசைப்படுவதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவரை கண்டுபிடிக்க உதவி செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் தமிழில் டைப் செய்து அவருடைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சச்சினின் இந்த ட்விட்டை கண்ட ரசிகர்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என்று அந்த ட்வீட்டை அதிக அளவில் பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.