MI vs SRH : தனது மகன் எடுத்த முதல் ஐ.பி.எல் விக்கெட் குறித்து சச்சின் வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

Arjun-Tendulkar-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 64 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் 178 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்கிற நிலையில் அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர் புவனேஸ்வர் குமாரை வீழ்த்தினார். கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் அந்த போட்டியில் விக்கெட்டை கைப்பற்றவில்லை.

- Advertisement -

இவ்வேளையில் இந்த போட்டியில் புவனேஸ்வர் குமாரை வீழ்த்தியதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டினை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தனது மகனின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து தனது சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள அவர் அதில் குறிப்பிடதாவது :

இதையும் படிங்க : IPL 2023 : கேப்டன்ஷிப் பிரஷர் கொஞ்சம் கூட இல்லாத அவர மாதிரி கேப்டன் யாருமில்ல, இனி வரபோறதும் இல்ல – கவாஸ்கர் பாராட்டு

மும்பை அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேமரூன் கிரீன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தினார். அதேபோன்று இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இறுதியாக டெண்டுல்கருக்கு ஒரு ஐபிஎல் விக்கெட் என அவர் தனது மகன் எடுத்த அந்த விக்கெட்டை சுவாரசியமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement