IPL 2023 : கேப்டன்ஷிப் பிரஷர் கொஞ்சம் கூட இல்லாத அவர மாதிரி கேப்டன் யாருமில்ல, இனி வரபோறதும் இல்ல – கவாஸ்கர் பாராட்டு

Gavaskar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட தீபக் சஹார், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் காயத்தால் பங்கேற்காதது பின்னடைவை கொடுத்தாலும் அதை துசார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் போன்ற அனுபவமற்ற இளம் வீரர்களை வைத்து சமாளிக்கும் சென்னை இந்தளவுக்கு வெற்றி நடை போடுவதே நிறைய எதிரணிகளுக்கு ஆச்சரியமாகவே அமைகிறது.

Dhoni

- Advertisement -

ஏனெனில் இதே துஷார் டேஷ்பாண்டே இத்தொடரின் துவக்கத்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி நோபால்களை போட்டு சென்னையின் 2 வெற்றிகள் பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனாலும் கேப்டன் தோனி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவதை பயன்படுத்திய அவர் தற்போது ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். அதே போல பொறுமையாக விளையாடக்கூடிய ரகானே இத்தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடி சரவெடியாக விளையாடி வருவதும் சிவம் துபே முக்கிய ரன்களை விளாசி வெற்றியில் பங்காற்றுவதும் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்து வருகிறது.

கவாஸ்கர் பாராட்டு:
அதனால் இதர அணிகளில் தடுமாறும் வீரர்களும் இளம் வீரர்களும் தோனி தலைமையில் அசத்துவார்கள் என்ற கூற்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக இதர அணிகள் வீரர்களை தேடும் சூழ்நிலையில் தோனி மட்டும் உள்ளுக்குள் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வந்து தரமான வீரர்களை உருவாக்குவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் பாராட்டியிருந்தார். அத்துடன் பொதுவாகவே வரலாற்றில் சச்சின் உட்பட நிறைய மகத்தான வீரர்கள் கேப்டன்ஷிப் பொறுப்பேற்றதும் அதன் காரணமாக ஏற்படும் அழுத்தத்தில் பேட்ஸ்மேன்களாக தடுமாறிய கதைகள் உள்ளது.

MS Dhoni SIX

ஆனால் ஆரம்ப கால முதலே கேப்டன்ஷிப் பொறுப்பால் எந்த பாதிப்பையும் சந்திக்காத அளவுக்கு அதிகப்படியான அழுத்தம் நிறைந்த மிடில் ஆர்டரில் விளையாடி வரும் தோனி ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்கள் குவித்த முதல் விக்கெட் கீப்பர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சமீபத்தில் சாதனை படைத்தார். அதே போல ஓரிரு வருடங்கள் தாக்க பிடிக்க முடியாத பல கேப்டன்களை தாண்டி ஐபிஎல் துவங்கப்பட்ட 2008இல் விளையாடிய கேப்டன்களில் இப்போதும் விளையாடும் ஒரே கேப்டனாக காலங்களைக் கடந்து அசத்தும் தோனி ஒரு குறிப்பிட்ட (சென்னை) அணியை 200 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த முதல் வீரர் என்ற சரித்திரத்தையும் சமீபத்தில் படைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் எப்போதும் தடுமாறாத தோனியை போன்ற கேப்டன் ஐபிஎல் தொடரில் இல்லை இனி வரப்போவதும் இல்லை என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடினமான சூழ்நிலைகளிலிருந்து எப்படி வெளிவர முடியும் என்பது சென்னைக்கு தெரியும். அது எம்எஸ் தோனி தலைமையில் மட்டுமே சாத்தியமாக முடியும். 200 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வது மிகவும் கடினமாகும்”

Sunil-Gavaskar

“ஏனெனில் அதிகப்படியான போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வது பெரிய பாரமாகும். அது அவருடைய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் மஹி வேறுபட்டவர். அவர் முற்றிலும் மாறுபட்ட கேப்டன். இங்கே அவரைப் போன்ற கேப்டன் யாருமில்லை. வருங்காலத்திலும் அவரைப்போல் யாரும் இருக்கப் போவதில்லை” என்று கூறினார். அதே போல பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் கேட்ச்களை தவற விட்ட சென்னை வீரர்களை பாண்டியா, ரோகித் போன்ற இதர கேப்டன்களைப் போல் திட்டாமல் ஒரு கோபமான பார்வையால் தோனி சிறப்பாக செயல்பட வைத்ததாக பாராட்டும் கவாஸ்கர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மிக மிக மோசமான சாதனையை படைத்த பியூஷ் சாவ்லா – விவரம் இதோ

“தோனி கேப்டன்ஷிப் செய்யும் போது வீரர்கள் பெரிய அழுத்தத்தை சந்திக்க மாட்டார்கள். அவருடைய பொறுமை அனைவருக்கும் உதவி செய்யும். அந்த போட்டியில் அவர் சில கேட்ச்களை தவற விட்டதற்காக ஃபீல்டர்களை முறைத்தது உண்மை தான். ஆனால் அது எப்போதும் அவர்கள் மீது அழுத்தத்தை உண்டாக்குவதில்லை. அதனாலேயே அது போன்ற மோசமான தருணங்களில் இருந்தும் மீண்டெழுந்து சென்னை வெற்றி பெற முடிந்தது” என்று கூறினார்.

Advertisement