
சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்து இந்திய அணியை கரையேற்றிய கதையெல்லாம் பலவற்றை கேட்டு இருப்போம். தற்போது சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்து ஆனானப்பட்ட சௌரவ் கங்குலியையே மிரட்டிய கதை தற்போது வெளிவந்துள்ளது. கங்குலிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 1999 முதல் 2000ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது…
அந்த காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கரிடம் அனுபவம் குறைவான வீரர்களே இருந்தனர்… அப்போது தான் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்றோர் இந்திய அணிக்குள் வந்திருந்தனர். அந்த கட்டத்தில் 1997ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பார்படாஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 120 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை பெற்று இருக்கலாம்.
ஆனால் வெறும் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக பதவி ஏற்று முதல் வெளிநாட்டு தொடர் இதுதான். அதற்கு முன்னதாக பல தொடர்களில் தோற்றிருந்தது. தொடர்ந்து சச்சின் தலைமையில் இந்திய அணி தோற்று கொண்டே வந்ததால் மிகவும் விரக்தி அடைந்தார் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்.
இந்த டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பின்னர் இளம் வீரர்கள் அனைவரையும் அழைத்து ஒரு அறையில் வைத்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மேலும்., அந்தத் தொடரில் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது. இதன் காரணமாக அவரது கேப்டன்சி மீது அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. அப்போதுதான் அணிக்குள் புதிதாக வந்திருந்த சௌரவ் கங்குலி சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவு கூறுவதற்காக பேசிக்கொண்டிருந்த அவரிடம் சென்று தேற்றும் விதமாக செய்தார்
உடனடியாக தன்னை நோக்கி வந்த கங்குலியிடம் நாளை காலை ஓட்டத்திற்கு தயாராகுங்கள் அனைவருக்கும் கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது என்று கூறினார். ஆனால் கங்குலி, சச்சின் கூறியதை சட்டை செய்யவே இல்லை. இதனால் கடுப்பான சச்சின் டெண்டுல்கர் கோபமடைந்தார்.
மேலும், இப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து பொட்டியை கட்டி, வீட்டிற்கு அனுப்பி விடுவேன் ஒழுங்காக சொல்வதை மட்டும் செய் என்று மிரட்டியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். பின்னர் பிற்காலத்தில் இரண்டு பேரும் இணைந்து அதிரடியாக பல சாதனைகள் படைத்தது குறிப்பிடத்தக்கது இந்த இருவரும் இணைந்து 176 ஆட்டங்களில் 8777 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.