தோனி தான் இந்தியாவின் மகத்தான வீரர்.. அவர் இல்லனா சச்சின் இதை செஞ்சுருக்க முடியாது.. கனடா வீரர் பேட்டி

Aaron Johnson
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் கனடா கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அப்போட்டி ஜூன் 15ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் ஃபுளோரிடா நகரில் மாலையில் அதிகப்படியான மழை பெய்ததால் போட்டியை ரத்து செய்த நடுவர்கள் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுத்தனர்.

அதையும் சேர்த்து லீக் சுற்றின் முடிவில் 7 புள்ளிகளைப் பெற்று குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா சூப்பர் 8 சூப்பர் பகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. முன்னதாக இந்தப் போட்டியை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் பற்றி கனடா வீரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினர்.

- Advertisement -

தோனி மாதிரி வராது:
அதில் விராட் கோலி தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்றும் அவர் உலக கிரிக்கெட்டுக்கு நிறைய செய்துள்ளார் என்று சாத் ஃபின் ஜாபர், நிக்கோலஸ் கிர்ரோன் போன்ற கனடா வீரர்கள் பாராட்டினர். அந்த வரிசையில் இந்தியா எத்தனை வீரர்களை உருவாக்கினாலும் தோனி தான் மகத்தானவர் என்று கனடா வீரர் ஆரோன் ஜான்சன் பாராட்டினார்.

அத்துடன் தோனியின் உதவியாலேயே உலகக்கோப்பை 24 வருடங்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடைசியில் சாம்பியனாக விடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஜான்சன் பேசியது பின்வருமாறு. “இந்தியா பல மகத்தான கிரிக்கெட்டர்களை கொண்டுள்ளது. ஆனால் எம்எஸ் தோனி மிகவும் மகத்தானவர்”

- Advertisement -

“சச்சின் டெண்டுல்கர் ஒரு மகத்தான பேட்ஸ்மேன். ஆனால் தோனி இந்திய அணியை சுற்றியிருக்காமல் போயிருந்தால் துரதிஷ்டவசமாக சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வு பெற்றிருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 1992, 1996, 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளில் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் சச்சின் நன்றாகவே விளையாடினார்.

இதையும் படிங்க: கனடா போட்டி மழையால் ரத்து.. அடுத்த போட்டிகள் எப்போது? இந்தியாவின் சூப்பர் 8 சுற்று அட்டவணை இதோ

இருப்பினும் அவர்களுடைய தலைமையில் சச்சின் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் தோனி தலைமையில் 2011 உலகக் கோப்பையை வென்ற சச்சின் தன்னுடைய வாழ்நாள் கனவை நிஜமாக்கி ஓய்வு பெற்றார். அத்துடன் 2007 டி20 உலகக் கோப்பை, 2010இல் நம்பர் ஒன் டெஸ்ட் அணி, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என தோனி தலைமையில் பல மகத்தான வெற்றிகளையும் புதிய உச்சங்களையும் தொ

Advertisement