எப்போவும் அவர் பொறுப்பை ஏத்துக்கிட்டு இந்தியாவை ஜெய்க்க வைக்கிறாரு.. வேணும்னா 3 பேரை எறக்குகோம்.. ரோகித் பேட்டி

Rohit Sharma 33
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜூன் இருபதாம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 181/8 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக சூரியகுமார் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், பரூக்கி தலா விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

- Advertisement -

பொறுப்பான பிளேயர்:
அதனால் சூப்பர் 8 சுற்றையும் வெற்றிகரமாக துவங்கிய இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூரியகுமார் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் சூரியகுமார் – பாண்டியா பார்ட்னர்ஷிப்பை விட 4 ஓவரில் வெறும் 7 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா வெற்றிக்காக மிகவும் பொறுப்புடன் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த சில வருடங்களாக நாங்கள் இம்மைதானத்தில் சில டி20 போட்டிகளை விளையாடியுள்ளோம். எனவே நாங்கள் கொஞ்சம் நன்றாக திட்டமிட்டு கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொண்டோம். இந்த இலக்கை கட்டுப்படுத்தக்கூடிய கிளாஸ் பவுலிங் எங்களிடம் இருப்பது தெரியும். அனைவரும் இங்கே வந்து தங்களுடைய வேலையை செய்தனர்”

- Advertisement -

“அதையே நாங்களும் தொடர்ந்து பேசி வருகிறோம். சூரியகுமார் – பாண்டியா பார்ட்னர்ஷிப் கடைசியில் நன்றாக அமைந்தது. பும்ரா எங்களுக்காக என்ன செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். அவரை சாதுரியமாக பயன்படுத்துவது முக்கியம். அவர் எப்போதும் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு தயாராக இருக்கக்கூடிய ஒருவர். இந்தியாவுக்காக விளையாடும் போதெல்லாம் அவர் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பார்”

இதையும் படிங்க: 90/4 என இந்தியா சரிந்தப்போ பாண்டியாவும் நானும் இந்த திட்டத்தை தான் போட்டோம்.. ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி

“இங்குள்ள சூழ்நிலைகளை நான் பார்த்தேன். அதே போல அடுத்த போட்டியில் எதிரணியை பார்த்து தேவைப்பட்டால் எங்களுடைய அணியில் மாற்றம் செய்வோம். இந்த போட்டியில் 3 ஸ்பின்னர்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் எனக் கருதினோம். அதனால் அந்தத் தேர்வை எடுத்து வந்தோம். முன்னோக்கி நகரும் போது தேவைப்பட்டால் நான் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் போட்டியை துவக்குவேன்” என்று கூறினார்.

Advertisement