90/4 என இந்தியா சரிந்தப்போ பாண்டியாவும் நானும் இந்த திட்டத்தை தான் போட்டோம்.. ஆட்டநாயகன் சூர்யகுமார் பேட்டி

Suryakumar Yadav 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜூன் இருபதாம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 181/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது. அதனால் 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் சூரியகுமார்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு இந்தியா தடுமாறிய போது அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 (28) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 90/4 என இந்தியா தடுமாறிய போது இருவரும் ஒரே வேகத்தில் அடிப்போம் என்று பாண்டியாவிடம் சொன்னதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் இந்திய பேட்ஸ்மேன் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவிக்கும் அவர் தன்னுடைய திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு. “இதில் நிறைய கடின உழைப்பு மற்றும் செயல்முறைகள் உள்ளது என்று நினைக்கிறேன். என்னுடைய மனதில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்த விருதை நீங்கள் பவுலருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை”

- Advertisement -

“இந்த தொடரில் முதல் முறையாக ஆட்டநாயககன் விருது பேட்ஸ்மேனுக்கு கிடைத்துள்ளது. இது போன்ற போட்டிகளில் நீங்கள் உங்களுடைய திட்டத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதைப் பின்பற்றி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும். ஹர்திக் பாண்டியா வந்த போது நாம் இருவரும் ஒரே எண்ணத்துடன் விளையாடுவோம் என்று சொன்னது நினைவிருக்கிறது”

இதையும் படிங்க: 134க்கு ஆப்கானிஸ்தானை சுருட்டிய இந்தியா அபார வெற்றி.. வெறும் 7 ரன்ஸ் கொடுத்து மிரட்டிய பும்ரா தனித்துவ சாதனை

“நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் பெடலை அழுத்துவோம் என்று பேசிக்கொண்டு விளையாடினோம். அந்த வகையில் அழுத்தத்தை கொடுத்து கடைசியில் 180 ரன்கள் அடித்தது மகிழ்ச்சி” என்று கூறினார். அப்படி பெரிய வெற்றியை பெற்றதால் குரூப் 1 சூப்பர் 8 புள்ளிப்பட்டியலில் இந்தியா கூடுதல் ரன் ரேட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement