பெயர் மாதிரியே லிட்டில் சாம்பியன்.. ஆண் குழந்தையை பெற்ற விராட் கோலியை வாழ்த்திய சச்சின்

Sachin tendulkar 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக ஆரம்பத்திலேயே வெளியேறினார். ஆரம்பத்தில் முதல் 2 போட்டிகளில் மட்டும் வெளியேறிய அவர் பின்னர் கடைசி 3 போட்டிகளிலும் மொத்தமாக வெளியேறினார். அந்த வகையில் தம்முடைய 13 வருட கேரியரில் முதல் முறையாக விராட் கோலி ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையாக விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அப்போது விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாலேயே விராட் கோலி இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியதாக அவருடைய நண்பர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்தார். அது சில சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்தக் கருத்தை வாபஸ் பெற்ற ஏபி டீ வில்லியர்ஸ் உண்மை தெரியாமல் பேசியதற்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் தற்போது அவருடைய கருத்துக்கள் உண்மையாகும் வகையில் விராட் கோலிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது.

- Advertisement -

வாழ்த்திய சச்சின்:
அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் தங்களுடைய குடும்பத்திற்கு புதிதாக வருகை தந்துள்ள ஆண் குழந்தைக்கு அக்காய் என்று பெயர் வைத்துள்ளதாகவும் விராட் கோலி அறிவித்துள்ளது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் லிட்டில் சாம்பியனை பெற்றெடுத்த விராட் கோலி மற்றும் அவருடைய ஆண் குழந்தைக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “உங்கள் அழகான குடும்பத்தில் விலைமதிப்பற்ற சேர்க்கையான அக்காயின் வருகைக்காக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்துக்கள். அவரது பெயர் அறையை ஒளிரச் செய்வது போல அவர் உங்கள் உலகத்தை முடிவில்லா மகிழ்ச்சி மற்றும் சிரிப்பால் நிரப்பட்டும்”

- Advertisement -

“நீங்கள் என்றென்றும் போற்றும் சாகசங்கள் மற்றும் நினைவுகள் துவங்கும். இந்த உலகிற்கு வரவேற்கிறோம் லிட்டில் சாம்பியன்” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இது போக ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து நடைபெறும் டெஸ்ட் தொடரில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா கடைசி இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்புடன் விளையாட உள்ளது.

இதையும் படிங்க: மினி ஏலத்தில் விலை போகாத சர்பராஸ் கானை தற்போது வாங்க நினைக்கும் சி.எஸ்.கே மற்றும் கே.கே.ஆர் – ரூல்ஸ் படி நடக்குமா?

மறுபுறம் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டியிலும் விளையாடாத விராட் கோலி நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். அதில் சிறப்பாக செயல்பட்டு நேரடியாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் தான் அடுத்ததாக அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement