சற்றுமுன் : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு – வெளியான தகவல்

sachin

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்கள் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. சாதாரண மக்கள் இன்றி பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் என பலரையும் பாதித்த இந்த வைரஸ் ஆனது தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி அளவில் அதனை உறுதி செய்த சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் : நான் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். ஏனெனில் எனக்கு கொரோனா இருக்கும் ஒரு அறிகுறி ஏற்பட்டதன் காரணமாக மேற்கொண்ட சோதனையில் எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.

அதன் காரணமாக நான் வீட்டிலேயே என்னை தனிமைப் படுத்திக் கொண்டேன். மேலும் மருத்துவர்கள் கூறியுள்ள வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களின் வழிகாட்டுதலை பின்தொடர்ந்து வருகிறேன். எனவே நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களை உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சச்சினுக்கு கொரோனா உறுதியானது என்ற தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Sachin

ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது சச்சினுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்ற தகவல் தற்போது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.